Fennel water for weight loss: உடல் எடைக்குறைப்பிற்கு உதவும் பெருஞ்சீரக தண்ணீர்!

உணவுகளுக்கு சுவையைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், உடலுக்குத் தேவையான பல ஆற்றல்களையும் பெருஞ்சீரகத்தால் நாம் பெற முடியும்.

fennel water reduce belly fat

இன்றைய வாழ்க்கை முறை மாற்றமும், அதிக கலோரிகள் கொண்ட உணவுகளும் பெரும்பாலான மக்களுக்கு உடல் எடையை அதிகரிப்பதற்கு ஊன்றுகோலாக உள்ளது. ஆனாலும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டோம். நம்முடைய உடல் நலத்திற்கு எப்போது பல பாதிப்புகள் ஏற்படுகிறதோ? அப்பொழுது தான் எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்? என்ற தேடலில் இறங்குவோம்.

அதிகரித்த உடல் எடையால் பல உடல் நலப்பிரச்சனைகளும் நாம் சந்திக்க நேரிடும் என்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இதற்காக கண்ட கண்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உங்களது சமையல் அறையில் உள்ள பெருஞ்சீரகம் ஒன்று போதும். இதோ உடல் எடைப்பிற்கு எப்படி உதவுகிறது? என இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

women health benefits using fennel

உடல் எடைக்குறைப்பில் பெருஞ்சீரகம்:

  • அனைவரது வீடுகளிலும் உள்ள மசாலாப் பொருள்களில் ஒன்று தான் சோம்பு. உணவுகளுக்கு சுவையைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், உடலுக்கும் பல ஆற்றல்களையும் வழங்குகிறது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு வேளையாவது பெருஞ்சீரக தண்ணீரைக் குடிக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  • நம்மில் பலருக்கு சாப்பிட சில மணி நேரத்திலேயே அதிக பசி எடுக்கும். இதனால் கிடைத்த நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதால் நமது உடல் எடை அதிகரிக்கிறது. இதுப்போன்ற நிலையை நீங்களும் சந்தித்தால், இனி சோம்பு தண்ணீரைக் குடிக்கவும். இதற்கு இயற்கையிலேயே பசியை அடக்கும் பண்புகள் உள்ளது.
  • பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் அதிக சதை வளரக்கூடும். இதைக் கரைக்க வேண்டும் என்றால் சோம்பு தண்ணீரைக்குடிக்கவும். தேவையற்ற சதையைக் கரைத்துவிடும்.
  • சோம்பு தண்ணீர் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்க உதவுகிறது.
  • சோம்பு தண்ணீரைத் தினமும் குடித்து வரும் போது, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
  • உடல் எடைக்குறைப்பில் உள்ளவர்கள் தினமும் காபி குடிப்பதற்குப் பதிலாக சோம்பு தண்ணீரைக் குடிக்கலாம். நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும், அதிக கலோரிகள் உடலில் சேர்வதையும் தடுக்கிறது.

fennel seeds drink for reduce weight loss

பெருஞ்சீரகத்தின் ஊட்டச்சத்துக்கள்:

பெருஞ்சீரகத்தில் உள்ள கால்சியம், சோடியம், இரும்புச்சத்து , பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் உடல் எடையைக் குறைப்பு, வயிற்று பிரச்சனைகள் உள்ளிட்ட பலவற்றிற்கு தீர்வாக அமையும்.

மேலும் படிங்க: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டாப் 5 உணவுகள்!

இதுப்போன்ற பல்வேறு நன்மைகளை பெருஞ்சீரகம் கொண்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் உடல் எடைக்குறைப்பிற்கு மட்டுமில்லை, உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் இதை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்.

இதுப்போன்ற பல்வேறு நன்மைகளை பெருஞ்சீரகம் கொண்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் உடல் எடைக்குறைப்பிற்கு மட்டுமில்லை, உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் இதை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP