
ஒவ்வொரு முறையும் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை எடுப்போம். ஆனால் அதை முறையாக பின்பற்ற முடியாமல் பாதியில் கைவிடுவோம். இது தொடர்கதையான ஒன்று. விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பாதவர்களே இல்லை எனலாம். எந்தவொரு விஷயமும் விரைவில் நடந்தால் எல்லோருக்கும் சந்தோஷம் தான். எனவே இந்த பதிவில் உடல் எடையை வேகமாக குறைக்க உடற்பயிற்சியுடன் சேர்த்து 2 டயட் டிப்ஸ்களையும் இதில் பார்க்க போகிறோம்.
இந்த உதவிக்குறிப்புகள் எடையை வேகமாக குறைக்க உதவும். பலருக்கும் வாழ்க்கை நிலை, உடல் அமைப்பு, உடல் செயல்பாடு, மரபியல் மற்றும் ஹார்மோன்கள் உள்ளிட்ட எண்ணற்ற காரணங்களால் எடை இழப்பு கடினமான ஒன்றாக மாறுகிறது. உடற்பயிற்சியைத் தவிர, உடல் எடையை எப்படி விரைவாகக் குறைக்க முடியும் என்ற கேள்வியும் உங்கள் மனதில் இப்போது எழலாம். அதற்கான தீர்வை ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தீக்ஷா பவ்சர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதுக் குறித்தி விரிவாக பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:1 மாதத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
தினமும் காலை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். பளபளப்பான சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆளி விதை பொடியை நீரில் கரைத்து தூங்க செல்வதற்கு முன்பு குடிக்கவும். இப்படி செய்தால் உடல் எடை குறையும்.
இந்த பதிவும் உதவலாம்:இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com