herzindagi
hip fat exercises tip

hip fat reducing exercise: இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைத்து ஸ்லிம் ஆன உடல் அழகு பெற பின்வரும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-02-13, 12:00 IST

இடுப்பு பகுதியில் கொழுப்பு கூடினால் உடல் வடிவமற்றதாக மாறிவிடும். இதனால் நமக்கு பிடித்தமான சில உடைகளை கூட சௌகரியமாக போட்டுக்கொள்ள முடியாத நிலை உருவாகலாம். உங்கள் உடல் வடிவத்தை கச்சிதமாக மாற்ற ஆசைப்படுகிறீர்களா?

கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உங்களை வருத்தி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இடுப்பு பகுதிக்கான ஒரு சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் அழகிய உடல் வடிவத்தை பெறலாம். இதற்கான உடற்பயிற்சிகளை டாக்டர் ஹிதேஷ் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

பேசிக் ஹிப் லிஃப்ட்

hip fat exercise

இடுப்பை வடிவத்திற்கு கொண்டு வர இந்த பேசிக் ஹிப் லிஃப்ட் உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை செய்வதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

எப்படி செய்வது?

  • இந்த பயிற்சியை செய்ய உங்கள் முதுகு தரையில் படும்படி படுத்து, கைகளை உடலுக்கு அருகில் வைக்கவும்.
  • உங்கள் கால்கள் பாதி வளைந்த நிலையில் இருக்க வேண்டும்.
  • இந்த பயிற்சி உங்கள் இடுப்பு தசைகளை செயல்படுத்துகிறது.
  • இதனால் இடுப்பு பகுதியில் இறுக்கம் ஏற்படாது.
  • தோள்கள், கைகள் மற்றும் தலையை மட்டும் தரையில் வைத்த படி, இடுப்பு பகுதியை மட்டும் தரையில் இருந்து இருந்து உயர்த்தவும்.
  • இதை 15 தொகுப்புகளாக செய்யவும், ஒவ்வொரு தொகுப்பிலும் 20 முறை செய்ய வேண்டும்.

குளுட்டு பிரிட்ஜ்

hip fat exercise

இந்த உடற்பயிற்சி உங்கள் தொடையின் பின் பகுதி, இடுப்பு தசைகள் மற்றும் கீழ் முதுகு தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இதை சரியான முறையில் செய்வது மிகவும் முக்கியம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

எப்படி செய்வது?

  • முதலில் உங்கள் முதுகு தரையில் படும்படி படுக்கவும்.
  • பின்னர் உங்கள் கைகளை உடலுக்கு அருகில் கொண்டு வந்து ஓய்வு நிலையில் வைக்கவும்.
  • இப்போது உங்கள் முழங்கால்களை வளைத்து, கால் பாதங்களை உறுதியாக தரையில் வைக்கவும்.
  • பின்னர் உங்களுடைய முழங்கால்கள், இடுப்பு மற்றும் தோள்களும் ஒரு நேர் கோட்டில் வரும்படி இடுப்பை தூக்கவும்.
  • இந்த நிலையில் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
  • 15 வினாடிகளுக்குப் பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

குதிகால் தொடுதல் உடற்பயிற்சி

உங்கள் இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகமாக இருந்தால் இந்த குதிகால் தொடுதல் பயிற்சியை செய்யலாம். இது உங்கள் இடுப்பை வடிவமைப்பதோடு மட்டுமின்றி உடலை நீட்சி அடைய செய்ய செய்யவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க தண்ணீர் போதுமா?

எப்படி செய்வது?

hip fat exercise

  • இதை செய்வதற்கு முதலில் முதுகு தரையை தொடும்படி நேராக படுத்துக் கொள்ளுங்கள்.
  • இதற்கு பிறகு உங்கள் முழங்கால்களை வளைத்து கால் பாதங்களை உறுதியாக தரையில் வைக்கவும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் கழுத்தை சிறிது உயர்த்தவும்.
  • உங்கள் இரு கைகளாலும் உங்கள் குதிகால்களைத் தொட முயற்சிக்கவும்.
  • இதை 20 முறை மெதுவாக செய்யுங்கள்.
  • சில நாட்களில் உறுதியாக நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு- உங்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனை இருந்தால், மருத்துவரை ஆலோசித்த பின் இந்த பயிற்சிகளை செய்வது நல்லது. மேலும், உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொருத்து இந்த யோகாவின் பலன்களும் மாறுபடலாம்

இந்த பதிவும் உதவலாம்: கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் 5 யோகாசனங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com