சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறமாக நாம் பயன்படுத்தும் கிரீம்கள் மட்டும் இல்லை; அது நம் தினசரி பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பு ஆகும். இயற்கையான முறையில் உங்கள் சருமத்தை மேம்படுத்த உதவும் ஐந்து எளிய குறிப்புகளை இந்தக் கட்டுரையில் காணலாம்.
மேலும் படிக்க: உதடுகள் கருமையாக இருக்கிறதா? கவலையே வேண்டாம், இந்த 5 டிப்ஸை பின்பற்றுங்கள்
அதிகப்படியான வெயிலின் காரணமாக உங்கள் சருமம் பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் காணப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத புற ஊதா கதிர்களால் உங்கள் சருமம் பாதிக்கப்படுகிறது. இவை கொலஜன் உற்பத்தியை சீரற்ற நிலைக்கு மாற்றுகின்றன. மேலும், உங்கள் முகமும் பார்ப்பதற்கு பொலிவின்றி காணப்படும். இதனை தடுப்பதற்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் உடைகள் மற்றும் தொப்பி ஆகியவற்றையும் அணிந்து கொள்ளலாம். இது போன்ற விஷயங்களை மேற்கொள்ளும் போது உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க முடியும்.
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அன்டிஆக்சிடென்ட்ஸ், கொழுப்பு அமிலங்கள், சின்க், செலினியம் போன்ற அனைத்தும் நமது செல் சீரமைப்பு செயல்முறைகளை மேம்படுத்துகின்றன. இவை அழற்சியை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை (oxidative stress) அதிகரித்து, முகப்பரு, அழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, சருமத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க: முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமான கூந்தலை பெற எளிதான வழி; பூசணி விதை எண்ணெய்யை இப்படி பயன்படுத்தவும்
மன அழுத்தம் மற்றும் தூக்கம் ஆகிய இரண்டும் நம் சருமத்தின் ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு உடையவை. மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அதிகரிப்பு, எண்ணெய் உற்பத்தி, கொலஜன் மற்றும் அழற்சி எதிர்வினை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள், தூக்கமின்மை மற்றும் அதிகப்படியான மன அழுத்தத்தை கொண்ட நபர்களுக்கு சருமம் தொடர்பான பிரச்சனைகள் அதிகம் இருப்பதாக உறுதிப்படுத்துகின்றன. சீரான தூக்கத்தை பின்பற்றி, மன அழுத்தம் இன்றி இருந்தால் நம்முடைய சருமத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
சருமத்தில் அதிகப்படியான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது, பிஹெச் (pH) அளவை பாதிக்கும். எனவே, ஒரு மென்மையான க்ளென்சர், மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவற்றோடு உங்கள் சரும பராமரிப்பு முறையை அமைத்து கொள்ளலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது உங்கள் சருமம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை கணிசமாக குறைக்கிறது.
சருமம் என்பது அழகு சார்ந்தது மட்டுமல்ல. அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு ஆகும். உணவு, வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சரியாக பின்பற்றி சருமம் மட்டுமின்றி உடலில் ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சனைகளையும் தடுக்க முடியும். எனவே, இவற்றை சீராக பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com