herzindagi
eat avocado fruits..

தொப்பையைக் குறைக்க அவகோடா பழங்களை இப்படி சாப்பிடுங்க;நல்ல ரிசஸ்ட் இருக்கும்!

<span style="text-align: justify;">மற்ற பழங்களை விட அவகோடாவில்&nbsp; கலோரிகள் அதிகம் என்பதால் ஒரு நாளைக்கு 80 கிராம் அளவிற்கு அவகோடா பழங்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது.</span>
Editorial
Updated:- 2024-08-26, 19:16 IST

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடும் நபர்களில் நிச்சயம் நாமும் ஒருவராக இருப்போம். குண்டாக இருப்பதால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும், உடல் அமைப்பை முற்றிலும் மாற்றிவிடும். அதிலும் பெண்கள் திருமணத்திற்கு முன்னதாக ஒல்லியான உடம்புடன் இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்குப் பின்னதாக சில பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தால் உடல் பருமனாகிறது. இதனால் நினைத்த ஆடைகளை உடுத்துவதற்குக்கூட பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

அதிலும் குண்டாக இருப்பதோடு வயிற்றில் அதிக தொப்பையும் இருந்தால் பெண்களின் அழகு கெட்டுவிட்டதாக நினைப்பார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் கட்டாயம் உணவு முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இந்த வரிசையில் இன்றைக்கு உடல் எடையைக் குறைக்கவும், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைத்து தொப்பை பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நினைத்தால் வெண்ணெய் பழங்கள் என்றழைக்கப்படும் அவகோடா பழங்களை இந்த வழிமுறைகளில் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

avocada salad

மேலும் படிக்க: என்ன செய்தாலும் மலச்சிக்கலில் இருந்து விடுபட முடியலையா? இந்த 5 உணவுகள் உடனடி நிவாரணம்  

அவகோடா பழங்களை உட்கொள்வதற்கான வழிமுறைகள்:

  • வெண்ணெய் பழங்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்கவும் உதவுகிறது.
  • சாலட்டுகளில் சேர்க்கவும்: உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் கட்டாயம் சாலட்டுகள் சாப்பிடுவார்கள். இந்த சாலட்டுகளில் அவகோடா பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை சேர்க்கும் போது சாலட்டுகளின் சுவை அதிகரிப்பதோடு, உடலுக்குத் தேவையான மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உட்கொள்ளலை அதிகரிக்கிறது..
  • ரொட்டியுடன் சாப்பிடுதல்: குளிர்ச்சியான உணவுகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக, ரொட்டியில் அரை வெண்ணெய் பழத்தை மாற்றவும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிடும் போது உடலில் உள்ள கொழுப்புகள் குறையக்கூடும்.
  • ஸ்மூத்திகளில் சேர்க்கவும் : உடல் எடை குறைப்பு மற்றும் தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால் அவகோடா பழங்களை ஸ்மூத்திகளில் சேர்த்துக் கொள்ளலாம். உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதை சிற்றுண்டியாகவோ அல்லது சத்தான காலை உணவாக பாலுடன் அவகோடா பழங்களைச் சேர்க்க முயற்சி செய்யவும்.

மேலும் படிக்க: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்!

eat avocado with roti

  • வெண்ணெய் பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பதால், இரவில் பழத்தை சாப்பிட முயற்சிக்கவும். மேலும் மற்ற பழங்களை விட அவகோடா பழங்களில் கலோரிகள் அதிகம் என்பதால் ஒரு நாளைக்கு 80 கிராம் அளவிற்கு அவகோடா பழங்களைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

Image source - Google 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com