வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்!

மருந்துவ நிபுணர்களின் அறிவுரையின் படி, காலை எழுந்தவுடன் 500 முதல் 600 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். 

drinking water on empty stomach...

மனிதர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளுடன் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்கள் அவசியம். பம்பரமாக சுற்றித்திரியும் ஒவ்வொருவரின் வாழ்க்கையை சுறுசுறுப்பாக மாற்றுவதற்கு தண்ணீர் இன்றியமையாதது. 2 நாட்கள் கூட உணவில் இல்லாமல் இருந்துவிடலாம்.ஆனால் ஒரு நாள், ஒரு மணி நேரத்திற்குக் கூட தண்ணீர் கூட இல்லாமல் இருக்க முடியாது. அந்தளவிற்கு மனிதர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இப்படி உடல் நலத்தைப் பாதுகாப்புடன் வைத்திருக்க தண்ணீர் குடிப்பது அவசியம். அதிலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் பெற முடியும். இதோ அவற்றில் சில உங்களுக்காக..

glass of water

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

நீரேற்றம்:

அதிகாலையில் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு, ஒரு செம்பு தண்ணீர் முழுவதுமாக குடிக்க வேண்டும். தூங்கி எழுந்தவுடன் உடல் சோர்வாக இருக்கும் என்பதால் அதை சுறுசுறுப்பாக மாற்றுவதற்கு தண்ணீர் உதவியாக இருக்கும். ஆம் உடலில் நீர்ச்சத்துக்கள் குறைவாக இருந்தால் சோம்பல் மற்றும் தலைவலி ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கும், உடலை எப்போதும் சுறுசுறுப்பாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாம்.

மேம்படுத்தப்பட்ட செரிமானம்:

மலச்சிக்கல் பிரச்சனை என்பது நம்மில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் அதிகாலையில் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் செரிமான மண்டலம் சீராக இருப்பதோடு மலச்சிக்கல் பிரச்சனையின்றி இருக்க உதவுகிறது. குடல் இயக்கம் சீராக இருக்கவும் உதவியாக இருக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கவும் உதவுகிறது.

காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் அதிகளவு தண்ணீர் குடிப்பது உங்களது ஆற்றலை அளவை அதிகரிக்கவும், உடல் சோர்வையும் நீக்குகிறது. மேலும் மனித மூளையில் 73 சதவீதம் நீர் இருப்பதால், மன மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு நீரேற்றம் அவசியம். எனவே முடிந்தவரை உங்களால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ? அந்தளவிற்கு தண்ணீர் குடிப்பது நல்லது.

மேலும் படிக்க:மன அழுத்தத்திற்கு ஆளாகும் முன் உடலில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்

benefits of drinking water ()

இதோடு மட்டுமின்றி அதிகளவு தண்ணீர் குடிப்பது தலைமுடியின் பொலிவை மீட்டெடுக்கவும், முடி வலுப்பெறவும் உதவுகிறது. எந்தளவிற்கு அதிகளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ? அந்தளவிற்கு உடலின் வளர்சிதை மாற்றம் சீராகி உடல் எடையைக்குறைபபதற்கு உதவுகிறது. மருந்துவ நிபுணர்களின் அறிவுரையின் படி, காலை எழுந்தவுடன் 500 முதல் 600 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். இனி உங்களது உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றால், அதிகளவு தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP