பல நூற்றாண்டுகளைக் கடந்தும் கீரைகள் என்றாலே ஆண்கள் பெண்கள் என குழந்தைகள் வரை அனைவருக்கும் எக்கச்சக்க நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏனென்றால், பச்சை இலை காய்கறிகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் முதல் இதய பிரச்சினைகள் வரை நன்மைகளை கொடுக்கும். அதில் மிக முக்கியமான இயற்கையின் வரப்பிரசாதமான பாலக்கீரை எக்கச்சக்க நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். குறிப்பாக இதய ஆரோக்கியம் முதல் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, எடை இழப்பு, எலும்புகளை வலுப்படுத்துதல், பற்களை வெண்மையாக்குதல், புற்றுநோயை தடுத்தல், மலச்சிக்கல் மற்றும் நெஞ்சு எரிச்சலை போக்குதல் உள்ளிட்ட பல நன்மைகளை கொடுக்கும் இந்த பாலக்கீரையை ஆரோக்கியமான வழிகளில் தயார் செய்து வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் மேல் காணும் நன்மைகளை தாராளமாக பெறலாம்.
இயற்கையின் வரப்பிரசாதமான பாலக்கீரை தொக்கு செய்முறை
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- தேவையான அளவு,
- கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்,
- வர மல்லி- ஒரு ஸ்பூன்,
- சீரகம்- ஒரு ஸ்பூன்,
- வெங்காயம்-1,
- பூண்டு -6,
- மிளகாய் தூள்-1/4 ஸ்பூன்,
- தக்காளி-1/2 பழம்,
- புளி- சிறிய துண்டு,
- கடுகு-1/4 ஸ்பூன்,
- வெந்தயம்- சிறிதளவு,
- வர மிளகாய்-3,
- கருவேப்பிலை- தேவையான அளவு,
- பாலக்கீரை-250 கிராம்,
- உப்பு-தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும் பின்னர் அதனுடன் மல்லி விதைகள் மற்றும் சீரகம் சேர்த்து கருகிவிடாமல் மிதமான வெப்பநிலையில் வைத்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- பின்னர் வதக்கியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். மீண்டும் அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து சிறிது வழங்கவும் பூண்டு பற்களை அதில் சேர்க்கவும்.
- வெங்காயமும் பூண்டும் சிறிது வதங்கியவுடன் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பாதி தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளுங்கள், பின் இதனுடன் ஒரு சிறிய துண்டு புலியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இப்போது வதக்கியவற்றை இரண்டு நிமிடங்கள் வரை அப்படியே நன்கு வதங்க விடுங்கள், வதங்கிய வெங்காயம் உள்ளிட்டவற்றை நன்கு ஆற வைத்து அதனை ஏற்கனவே மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து வைத்துள்ளவற்றுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
- இப்போது கீரை தொக்கிற்கு தேவையான மசாலா ரெடி. இப்போது பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு,வெந்தயம், காய்ந்த மிளகாய், பூண்டு 2 பற்கள், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- கீரையை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொண்டு அதனை தாளிப்புடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும், வதக்கியவற்றை அப்படியே இரண்டு நிமிடங்கள் வேக விடுங்கள்.
- கீரை முக்கால் பதம் வெந்து வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தொக்கிற்கு தேவையான மசாலா கீரையுடன் சேர்த்து கிளறி விடுங்கள்.
- இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கீரை தொக்கின் மீது சிறிது நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தொக்கை அப்படியே ஐந்து நிமிடங்கள் அடுப்பில் மிதமான வெப்ப நிலையில் வைத்து தொக்குப் பதம் வரும் வரை விட்டு விடுங்கள்.
- கீரை தொக்கில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது கீரை தொக்கு தயாராகிவிட்டது.
- இந்தக் கீரையை சாதம் மற்றும் இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவற்றிற்கு வைத்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும் மேலும் அதிக நன்மை கொண்டது.
பாலக்கீரை தொக்கு - எக்கச்சக்க நன்மைகளை அள்ளி தரும் பாலக்கீரை
எடை இழப்புக்கு உதவுகிறது
பாலக் கீரையில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. உங்கள் கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தால், பாலக் கீரையை சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில், சரியான உடற்பயிற்சியையும் செய்யுங்கள்.
விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துதல்
கீரை சாப்பிடுவது விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. இலை கீரைகளில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.
இது விந்தணு இயக்கத்தை மேம்படுத்துகிறது.
இதயத்திற்கு நல்லது
பாலக் கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த வைட்டமின்கள் அனைத்தும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த நாளங்கள் அடைபடுவதைத் தடுக்கின்றன.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு
- பாலக் கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைக் குறைக்க உதவுகின்றன.
- இது உடலில் இருந்து நச்சுகளை நீக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருகிறது. எனவே, வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் கீரை சாறு குடிப்பது சருமத்தை பளபளப்பாகவும் அழகாகவும் வைத்திருக்கும்.
பற்கள் வெண்மையாக்குதல்
- நீங்கள் கீரையை உட்கொள்ளும்போது, அதில் உள்ள கால்சியம் சத்து உங்கள் பற்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் பற்களில் உள்ள கறைகளை அகற்றவும் உதவுகிறது.
- இது வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் அமிலங்களை நடுநிலையாக்க உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. எனவே, உங்கள் உணவில் கீரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புற்றுநோயைத் தடுக்கிறது
- புற்றுநோய் ஆய்வுகள் கீரையில் உள்ள ஃபிளாவனாய்டு உள்ளடக்கம் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாகக் காட்டுகின்றன.
- பாலக் கீரையில் குளோரோபில், கரோட்டினாய்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கட்டி வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.
- பாலக் கீரை மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இது இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு நோயைத் தடுப்பதில் பாலக் கீரை மிகவும் உதவியாக இருக்கும்.
மலச்சிக்கலை நீக்குகிறது
- பாலக் கீரையில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. மலம் சீராக வெளியேற உதவுகிறது.
- இது குடல்களைச் சுத்தப்படுத்தி, அவற்றின் புறணியை உகந்த முறையில் சரிசெய்கிறது. 100 மில்லி கீரைச் சாற்றை சம அளவு தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் மலச்சிக்கலைப் போக்கலாம்.
மேலும் படிக்க:குஸ் குஸ் ரெசிபி : 10 நிமிடத்தில் செய்யக் கூடிய எளிதான காலை உணவு
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள்.
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation