மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் அபாயம் அதிகம். இது Aedes aegypti கொசுக்களால் பரவும் வைரஸ் நோயாகும். டெங்குவின் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்றால் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, தோல் வெடிப்பு, சில நேரங்களில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். இது தீவிரம் அடையும் நிலையில் காய்ச்சல் ரத்தக்கசிவு டெங்குவாக மாறும். அதே சமயம் டெங்கு காய்ச்சல் என்பதை கண்டறிய எப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் மக்களிடம் எழுகிறது. உங்கள் மனதிலும் இதே கேள்வி இருந்தால், அதைப் பற்றிய தகவலை இந்தக் கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
காய்ச்சல் வந்து எத்தனை நாட்கள் கழித்து டெங்கு பரிசோதனை செய்ய வேண்டும்?
3 முதல் 7 நாட்களுக்குள் டெங்கு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இந்த சோதனைகளில் மூன்று வகைகள் உள்ளது, முதலாவது NS1 ஆன்டிஜென். இதன் பொருள் நாம் வைரஸைக் கண்டறிந்துள்ளோம். இரத்தத்தில் எவ்வளவு வைரஸ் இருக்கிறது என்பதை இந்த சோதனை மூலம் கண்டறிந்து விடலாம். காய்ச்சல் வந்த உடனே, அதவாது 3 நாட்களுக்கு முன்னரே டெங்கு பரிசோதனை செய்து கொண்டால், பல முறை டெங்கு பரிசோதனை எதிர்மறையாக வரும், அதுவே பின்னர் பிரச்சனை அதிகரிக்கும். NS1 ஆன்டிஜென் சோதனை டெங்குவின் ஆரம்ப கட்டங்களில் தொற்றுநோயைக் கண்டறிய உதவுகிறது.
IgM சோதனையானது டெங்கு வைரஸுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அளவிடுகிறது. குறிப்பாக ஆன்டிபாடிகள் இருப்பது. காய்ச்சல் தொடங்கி 5 முதல் 7 நாட்களுக்குப் பிறகு இரத்தத்தில் IgM ஆன்டிபாடிகள் கண்டறியப்படுகின்றன, எனவே காய்ச்சல் தொடங்கிய முதல் 5 நாட்களில் IgM சோதனை செய்தால் அது எதிர்மறையாக இருக்கலாம்.
இது தவிர, IgG சோதனையும் செய்வதால் பழைய தொற்றுநோய்களைக் கண்டறிய உதவுகிறது. உங்களுக்கு இருந்த டெங்கு இப்போது செயலில் இல்லை என்பதை இந்த சோதனை சொல்கிறது.
மேலும் படிக்க: மெனோபாஸ் பெண்களுக்கு உடல் எடை வேகமாக அதிகரிக்கக் காரணங்கள் தெரியுமா?
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation