herzindagi
neat weight loss by expert

NEAT Weight Loss: உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை வேகமாக குறைக்க, இதை ட்ரை பண்ணுங்க!

உடல் எடையை குறைக்க சிறந்த மற்றும் பயனுள்ள வழியை தேடுகிறீர்களா? இன்றைய பதிவு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்…
Editorial
Updated:- 2023-08-25, 15:09 IST

உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஜிம்மிற்கு செல்ல நேரம் இல்லையா?

உடல் பருமனால் கவலைப்படுகிறீர்களா?

இது உங்களுக்கான பதிவு! இன்று மிகவும் எளிதாக பின்பற்றக் கூடிய ஒரு செயல் முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளோம்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு உடல் எடையை குறைப்பது சற்று கடினமாக இருக்கலாம். உணவு பழக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் உடலில் கொழுப்பு சேர தொடங்குகிறது. இதனுடன் உடல் செயல்பாடுகள் குறையும் பொழுதும் உடல் எடையை குறைப்பது இன்னும் கடினமாக மாறிவிடுகிறது. ஆனால் எந்த வயதிலும் உடல் எடையை குறைப்பது சாத்தியமே. நீங்களும் ஃபிட் ஆக மாற இந்த NEAT செயல்முறையை பின்பற்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: என்றும் இளமையுடன் இருக்க இந்த 1 யோகாவை செய்தால் போதும்!

NEAT(Non-Exercise Activity Thermogenesis) என்பது உடற்பயிற்சி அல்லாத உடல் செயல்பாடுகளை குறிக்கிறது. இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான பாலக் கொராடியா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

NEAT என்றால் என்ன?

இது கலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சி அல்லாத செயல்பாடுகளாகும். நாள் முழுவதும் நாம் செய்யும் சிறிய அசைவுகளும் இதில் அடங்கும். சமையல், சுத்தம் செய்தல், ஷாப்பிங் செய்தல் போன்ற சிறிய வேலைகளும் வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் கலோரிகளை எரிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இது போன்ற உடல் செயல்பாடுகள் குறையும் பொழுது உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய், மாரடைப்பு மற்றும் ஒரு சில புற்று நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. நீண்ட நேரம் செயல்பாடுகளின்றி உட்கார்ந்து இருப்பதால் எடை அதிகரிப்பதுடன் பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

NEAT இன் நன்மைகள்

no exercise weigt loss tips

  • தினசரி உடல் செயல்பாடுகள் மூலம் 15-50% கலோரிகளை எரிக்க முடியும். இதனால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.
  • NEAT செயல்பாடுகளை செய்வது மிக மிக சுலபம். இது அனைவருக்கும் ஏற்றது.
  • தசைகளை குணப்படுத்த உதவும்.
  • மன அழுத்தத்தை போக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • இதய ஆரோக்கியம் மேம்படும்
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்
  • நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
  • உடலில் ஏற்படும் அழற்சியின் அளவை குறைக்கலாம்.

NEAT செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான வழிகள்

no exercise neat weight loss

  • ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடையில் சில நிமிடங்கள் நிற்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து உட்கார்ந்து இருப்பதை தவிர்க்கவும்.
  • ஃபோனில் பேசும் பொழுது நடந்து கொண்டே பேசலாம். உங்களால் முடிந்தவரை நடப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  • லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தலாம்.
  • வீடு துடைத்தல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளை செய்யலாம்.
  • முற்றிலும் உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்ட பெண்களுக்கு, NEAT செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அவர்களை நாள் முழுவதும் இன்னும் சுறுசுறுப்பாக மாற்ற உதவுகிறது. இதனால் கலோரிகளை எரிப்பதுடன் உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com