சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நிறைய நேரமும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. இந்நிலையில் சருமத்தை முறையாக பராமரிக்க தவறினால் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், கருவளையம், சுருக்கம் போன்ற பல சரும பிரச்சனைகள் ஏற்படலாம். இதனுடன் வயது கூடும் பொழுது கொலாஜன் உற்பத்தியும் குறைகிறது. இதனால் சருமம் அதன் நெகிழ்ச்சி தன்மையை இழக்கிறது.
வயதாகும் பொழுது சருமம் அதிக வறட்சியுடன் காணப்படலாம். சருமத்தில் ஈரத்தன்மை குறையும்பொழுது சுருக்கங்களும் அதிகரிக்கின்றன. இனி வயது முதிர்வின் அறிகுறிகளை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் மூலம் நல்ல ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பை தாண்டி, உடலில் பல அதிசயங்களை செய்யும் வலிமை பயிற்சிகள்!
வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்க உதவும் ஒரு எளிமையான யோகா பயிற்சியை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். இது தசைகளை வலுப்படுத்தி சருமத்தை இறுக்கமாக மாற்றுகிறது. இந்த யோகாசனம் குறித்த தகவல்களை யோகா நிபுணரான ஜூஹி கபூர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பயிற்சியானது முகம் மற்றும் கழுத்தை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தவும் நீட்சி அடையவும் செய்கிறது. இதை செய்து வந்தால் உங்கள் முக அழகு மேம்படும்.
இந்த பயிற்சியை செய்யும்பொழுது உடலின் வடிவம் உட்கார்ந்திருக்கும் சிங்கம் போல் தெரிவதால் இதை ஆங்கிலத்தில் "Lion Pose " என்று அழைக்கிறார்கள்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் சிங்காசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பல நோய்களுக்கு மருந்தாகும் கொய்யா இலைகளை, எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com