herzindagi
can diabetics eat fruits

Bananas and Diabetes : சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏதேனும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? அவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வோம் வாருங்கள்…
Editorial
Updated:- 2023-08-23, 09:03 IST

வாழைப்பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான பழ வகையாகும். இதில் பல சத்துக்கள் இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ள தயங்குகிறார்கள். வாழைப்பழம் சாப்பிட்டால் இரத்த சர்க்கரையின் அளவுகள் அதிகரித்து விடுமோ என்று அச்சத்தினால் வாழைப்பழம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கின்றனர். உண்மையில் வாழைப்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்குமா? இதற்கான விடையை இன்றைய பதிவில் படித்தறியலாம். 

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா? 

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழங்களை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுக்கதை பரவலாக நம்பப்படுகிறது. பழங்களில் வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இது போன்ற சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவை முற்றிலும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. 

இந்த பதிவும் உதவலாம்:  பல நோய்களுக்கு மருந்தாகும் கொய்யா இலைகளை, எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? 

இது குறித்து அமெரிக்கன் டயாபெடிக் அசோசியேஷன் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சில பழங்கள் இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இவற்றை சாப்பிட்டு வர டைப் 2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கலாம். ஆனால் ஒரு சில அதிக கார்போஹைட்ரேட் உள்ள பழங்களை சாப்பிடும் பொழுது, அதை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளால் இரத்த சர்க்கரையின் அளவுகள் வேகமாக அதிகரிக்கலாம். 

வாழைப்பழத்தில் எவ்வளவு கார்போஹைட்ரேட் உள்ளது? 

banana and diabetes

வாழைப்பழத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளன. பொதுவாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது இரத்த சர்க்கரையின் அளவுகள் உயரும். மேலும் நிபுணர்களின் தகவல் படி ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் 6 கிராம் மாவுச்சத்தும், 14 கிராம் சர்க்கரையும் உள்ளது. 

நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழங்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் மலச்சிக்கலை போக்கவும் உதவுகின்றன. ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழம் 51 கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் 250 கிராம் வரை வாழைப்பழங்களை எடுத்துக் கொள்வது பாதுகாப்பாக கருதப்படுகிறது. 

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? 

can diabetics eat banana daily

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. 

ஒவ்வொருவருடைய இரத்த சர்க்கரையின் அளவுகளை பொறுத்து இந்த கருத்துக்கள் மாறுபடலாம். எனவே உங்களுடைய உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசனை செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பை தாண்டி, உடலில் பல அதிசயங்களை செய்யும் வலிமை பயிற்சிகள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com