
குளிர்காலம் அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அந்த சூழலில் சூப் குடிக்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைப்பார்கள். இது சுவை மட்டுமல்லாமல் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவியாக இருக்கும். அந்த வகையில் சூப் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
பல சூப்கள் புரதம், வைட்டமின் சி, வைட்டமின் டி, சின்க், பீட்டா கரோட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்தவை. இந்தச் சத்துகள் தொற்றுநோய் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. உடல் சோர்வாக இருக்கும்போது, சத்து நிறைந்த சூப் குடிப்பதன் மூலம் ஆற்றலை பெறலாம்.

மேலும் படிக்க: Benefits of cashews: முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
ஆரோக்கியத்திற்கு போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். அந்த வகையில், காய்கறிகள் அதிகமாக எடுத்துக் கொள்வதற்கு சூப் ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. மேலும், பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உடலுக்கு வழங்க சூப் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 உணவுகள்; இவற்றை மிஸ் பண்ணாதீங்க மக்களே
ஆரோக்கியமான உணவை தயாரிப்பதற்கு சில சமயங்களில் நேரம் எடுக்கும். ஆனால், சூப்கள் விரைவாக தயாரிக்கப்பட்டு சேமிக்க எளிதானவை. பல சூப்களை காற்று நுழையாத கொள்கலன்களில் சேமித்து பின்னர் பயன்படுத்தலாம். இது பரபரப்பான வேலைப்பளு கொண்டவர்களுக்கு உதவியாக இருக்கும்.

குறிப்பாக, எலும்பு சூப்களில் கால்சியம், கொலஜன், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துகள் இருக்கும். இவை, ஹார்மோன் ஒழுங்குமுறை, காயம் குணமடைதலை வேகப்படுத்தும் முறை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகின்றன. தொடர்ந்து சூப் அருந்துவது ஒட்டுமொத்த உடல் செயல்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது.
சூப்கள் நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் செரிமானத்திற்கு எளிதானவை. இவை குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இது செரிமான பாதையை தளர்த்தி, வயிறு உப்புசத்தை குறைத்து, உணவுகளுக்கு வயிறை தயார் செய்கிறது.
இது தவிர சூப்களை குறைந்த செலவில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கலாம், மேலும், அவற்றை அதிக அளவில் தயாரித்து பல வேளைகளுக்கு சேமித்து வைக்கலாம். இது குறைவான செலவில் சத்தான உணவை பராமரிக்க உதவுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com