இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை, உணவு முறை, பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களும் வயிறு சார்ந்த பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன. இதில் உப்புசம், வாய்வு, மூலம் போன்ற பிரச்சனைகளும் அடங்கும். நீண்ட நாட்களாக தொடரும் வாய்வு பிரச்சனையை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதற்கான காரணத்தை கண்டறிய மருத்துவரை ஆலோசனை செய்யவும். என்றாவது ஒரு நாள் ஏற்படக்கூடிய வாய்வு பிரச்சனையை சுலபமாக வீட்டு வைத்தியத்தின் உதவியுடன் சரி செய்ய முடியும்.
சீரகத் தண்ணீர்
வாய்வு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் பெற சீரகத் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீரகம் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் என்சைம்களின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. மேலும் கொழுப்புகளை ஜீரணிக்கவும், கல்லீரலில் இருந்து பித்த சாற்றை பிரித்தெடுக்கவும் உதவுகிறது. உணவு சாப்பிட்ட பிறகு உங்களுக்கு உப்புசம் அல்லது வாய்வு தொந்தரவு இருந்தால் சீரக தண்ணீர் குடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வீட்டில் இருந்தபடியே 7 நாட்களில் எடையை குறைப்பது எப்படி?
செய்முறை
- இரண்டு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- இது சிறிது வற்றி, நிறம் மாறியவுடன் அடுப்பை அணைக்கவும்.
- வெதுவெதுப்பான சீரகத் தண்ணீர் குடித்து வாய்வுதொல்லையிலிருந்து விடுபடலாம்.
பெருங்காயத் தண்ணீர்
வயிற்று உப்புசம் அல்லது வாயு தொல்லைக்கு பெருங்காயம் கலந்த தண்ணீர் குடிக்கலாம். ஒரு சிலர் குழந்தைகளுக்கு வாய்வுதொந்தரவு ஏற்படும் பொழுது பெருங்காயத்தை பேஸ்ட் ஆக குழைத்து வயிற்றை சுற்றி தடவுவார்கள். இது வாயுவை நீக்குகிறது. பெருங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன.
MY22BMI இன் ஊட்டச்சத்து நிபுணரும் நிறுவனருமான ப்ரீத்தி தியாகியின் அவர்களின் கருத்துப்படி," பெருங்காயத் தண்ணீர் வாய்வுமற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் நச்சுக்களை நமது செரிமான மண்டலத்தை விட்டு வெளியேற்ற உதவுகிறது". நீங்கள் உப்புசம் அல்லது வாய்வுத் தொல்லையால் சிரமப்பட்டால் இந்த பெருங்காய தண்ணீர் உங்களுக்கு நிச்சயம் நல்ல நிவாரணம் தரும்.
செய்முறை
- ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கால் டீஸ்பூன் பெருங்காயம் மற்றும் கருப்பு உப்பு கலந்து குடிக்கலாம்.
- இது வாய்வு தொல்லையிலிருந்து உடனடி நிவாரணம் தரும்.
எலுமிச்சை + சமையல் சோடா
இந்த கலவை அஜீரணம் மற்றும் வாய்வு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக எடுத்துக்கொள்வது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது அசிடிட்டி மற்றும் வாய்வு பிரச்சனையை நீக்குகிறது.
செய்முறை
- ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்கவும்.
- இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
உணவு மாற்றம்
வாயுத் தொல்லையைத் தவிர்க்க, சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வதும் அவசியம். கொழுப்பு நிறைந்த உணவின் அளவைக் குறைத்து அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் திரவங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த 3 வீட்டு வைத்தியங்களும் வாய்வுமற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். வாய்வு பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சில நேரங்களில் இது சில தீவிர நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே வாய்வு தொல்லை நீடித்தால் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation