இஞ்சி இடுப்பழகி என்றெல்லாம் பெண்களை வர்ணிப்பார்கள். இதற்கேற்றால் போல் அவர்களும் தங்களுடைய அழகைப் பேணிக்காப்பதற்கான பல முயற்சிகளை எடுப்பார்கள். இதெல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னர் தான். திருமணம் முடைந்தாலே தங்களுடைய அழகையும், உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு மறந்துவிடாதீர்கள். இது தான் பல உடல் நலப்பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
இவ்வாறு பல இன்னல்களை அவர்கள் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் புன்னகையோடு கடந்து செல்வார்கள். இருப்பினும் சில நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, அவர்களை அப்படியே மாற்றிவிடும். ஆம் நாள் முழுவதும் சக்கரம் போன்று ஓடிக் கொண்டிருப்பவர்கள், அப்படியே நின்றுவிடுவார்கள். கால்நீட்டி தூங்கினால் மட்டுமே வலிக்கு சில நிமிடங்கள் நிவாரணம் கிடைக்கும். ஆனாலும் நிரந்தர தீர்வு என்பது கிடைக்காது. இதுப்போன்ற நிலை பெண்களாகிய உங்களுக்கும் உள்ளதா? இதோ உங்களது இடுப்பு வலிக்குத் தீர்வு காணும் யோகாசனம் இது தான்.
இடுப்பு வலிக்கான சலபாசனம்:
மேலும் படிங்க:பெண்களின் எலும்புகளை உறுதியாக்கும் உணவுகளின் லிஸ்ட்!
செய்முறை:
- முதலில் நீங்கள் தரையில் குப்புறப்படுத்துக்கொள்ளவும். பின்னர் உங்களது உள்ளங்கங்கைகளை மேல் நோக்கி மூடித் தொடைகளுக்கு அடியில் வைக்கவும்.
- பின்னர் கைகளைத் தரையில் அழுத்தி இடுப்புப்பகுதி தரையில் இருக்கக் கால்களை விறைப்பாக்கி மேல்நோக்கி உயர்த்தி சில நிமிடங்களுக்கு அப்படியே இருக்கவும்.
- சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மெதுவாக பழைய நிலைக்கு வரவேண்டும்.
- இந்த ஆசனத்தில் கால்களை உயர்த்தும் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அதே போன்று கால்களை கீழே இறக்கும் போது மூச்சை லேகாக வெளியிட வேண்டும்.
- உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த ஆசனங்களை நீங்கள் செய்வதற்கு முயற்சி எடுக்கவும். இது இடுப்பு வலிக்கு மட்டும் தீர்வு காண்பதோடு, வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைப்பதற்கு உதவும். மேலும் இதயம் பலமடையும். ஜீரண சக்தி மேம்பாடு அடைவதோடு, நாள் முழுவதும் உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க நிச்சயம் உதவக்கூடும். இது மட்டுமின்றி நீரிழிவு பிரச்சனைக்கும், பெண்கள் நோய்க்கும் சிறந்த தீர்வாக அமையும்.

இன்றைக்கு ஆண்களை விட பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, இதுப்போன்ற நாள்பட்ட இடுப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபட சரியானக் கவனிப்பு அவசியம்.எனவே நீங்கள் வீடு மற்றும் அலுவலகப் பணிகளில் பிசியாகவே இருந்தாலும் உங்களுக்காக சில நேரங்கள் ஒதுக்கி இந்த யோகாசனத்தை செய்ய முயற்சிக்கவும். இது நிச்சயம் உங்களது இடுப்பு வலிக்கு சிறந்த தீர்வாக அமையக்கூடும். ஒருவேளை உங்களுக்கு அதிக வலி இருந்தால், எலும்பு மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதற்கான சிகிச்சை மேற்கொள்ள மறந்துவிடாதீர்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation