ஒவ்வொரு மனிதனுக்கும் எலும்புகள் தான் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கான அஸ்திவாரம். அதிலும் பெண்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் இன்றிமையாத ஒன்று. குழந்தைப் பிறப்பின் போது பெண்களுக்கு எலும்புகள் உறுதியாக இருந்தால் மட்டும் தான் சுகப்பிரசவத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதனால் தான் கர்ப்பமாக இருக்கும் போது அதிக கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும் என்பார்கள்.
குழந்தைப் பிறப்பின் போது மட்டுமில்லை, ஒவ்வொரு நாளும் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளைத் தங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோ எலும்புகள் வலுப்பெறுவதற்கான ஆரோக்கியமான உணவுகளின் லிஸ்ட் இங்கே…
எலும்புகளை உறுதியாக்கும் உணவுகள்:
- பச்சைக்காய்கறிகள்:உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் பச்சைக் காய்கறிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி மற்றும் அனைத்து கீரை வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கைக் கீரை கால்சியத்தை அதிகரித்து பெண்களுக்கு முதுகு எலும்புகளை வலுப்பெற செய்யும்.
- வாழைப்பழங்கள்:உடலில் செரிமான அமைப்பை சீராக்குவதற்கு மட்டும் வாழைப்பழங்கள் பயன்படவில்லை. எலும்பு ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழங்கள் உதவியாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் எலும்புகள் பலவீனமடைவதை் தடுக்கிறது.
- கொழுப்பு மீன்கள்: கால்சியம், வைட்டமின் டி போன்ற ஊட்டசத்துக்கள் அனைத்தும் கொழுப்பு மீன்கள் நிறைந்துள்ளது. ஒமோகா 3 அமிலங்களும் கொழுப்பு மீன்களில் அதிகளவில் உள்ளதால் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது.
- பனீரில் உள்ள புரத சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- பாதாம்: பெண்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஊற வைத்த அல்லது ஊற வைக்காத பாதாம்களைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருள்கள் எலும்புகளுக்கு மிகுந்த உறுதியை அளிக்கிறது.
- முட்டை: புரோட்டீன், கால்சியம் மற்றும் பல்வேறு வைட்டமின்கள் உள்ள முட்டையைத் தினமும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற உதவுகிறது.
- இதுப்போன்று உணவுகளை உட்கொண்டாலும் பெண்கள் மறக்காமல் நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளையும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- எலும்புகளை வலுவாக வைத்திருப்பதற்கு, நடைப்பயிற்சி, ஜாக்கிங், பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
- நீண்ட நேரம் நிற்பதன்மூலம் உங்களுக்கு வலி ஏற்படும் சமயத்தில், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இது அதிக எலும்பு தேய்மானம் எந்தளவிற்கு உள்ளது என்பதைக் கண்டறிய உதவியாக இருக்கும்.
- பெண்களுக்கு ஏற்படும் எடை அதிகரிப்பும் எலும்பு பலவீனமாவதற்குக் காரணம் என்பதால்,தேவையில்லாத எண்ணெய் பலகாரங்களையும், ஹோட்டல்களில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation