
சரியான ஊட்டச்சத்து உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் சோர்வையும் குறைக்கிறது. இதற்காக, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நாம் எடுத்து கொள்ளக் கூடிய உணவு வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.
மேலும் படிக்க: Sardine fish benefits: கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; எலும்புகளை வலுவாக்கும்; மத்தி மீனின் நன்மைகள்
கீரைகள், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. ஃபோலேட், புதிய செல்களை உருவாக்க துணைபுரிகிறது. வைட்டமின் சி இரும்புச்சத்தை உடல் உறிந்து கொள்வதற்கு உதவுகிறது. எனவே, வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை கீரைகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது சிறந்த பலனை தரும்.

பயிறு, கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் இரும்புச்சத்து, புரதம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துகளின் சிறந்த மூலமாகும். இவை குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டவை என்பதால், செரிமானத்திற்கு உதவுவதோடு, இரத்த ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளையும் உடலுக்கு வழங்குகின்றன.
மேலும் படிக்க: Badam pisin benefits: எலும்புகளை பலப்படுத்துவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை; பாதாம் பிசின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இவை இரும்புச்சத்து உறிந்து கொள்ளப்படுவதற்கு உதவுவதோடு, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கின்றன. ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க, தினமும் பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
பாதாம், ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளன. காலை உணவில் இவற்றை சேர்த்துக் கொள்வது அல்லது சிற்றுண்டியாக சாப்பிடுவது ஹீமோகுளோபின் அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
-1758108969014.jpg)
கோழி, இறால், மீன் போன்ற உணவுகளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கின்றன. சால்மன், மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது இருதய ஆரோக்கியத்திற்கு நன்மையை ஏற்படுத்தும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com