
வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவரிடத்தும் இருக்கும். இன்றைய காலத்தில் பணம், பொருள் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ? எவ்வித நோய் நொடியின்றி வாழ வேண்டும். இல்லையென்றால் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் மருத்துவமனைக்குத் தான் கொடுக்க வேண்டும். அந்தளவிற்கு வாழ்க்கையில் ஏற்படும் சில வாழ்வியல் மாற்றங்களால் பெயர் கூட தெரியாத பல நோய்களை அனுபவிக்க நேரிடுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் சோம்பலாக இருக்கக்கூடும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்? வெறும் 60 நாட்களில் தினசரி வாழ்க்கையில் சிறிய மாற்றங்களைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதோ என்னென்ன என்பது? குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: மூளையின் செயல்திறனை மேம்படுத்துவது முதல் உடல் ஆரோக்கியத்திற்குத் தினமும் பீட்ரூட் ஜுஸ் குடிங்க!
வாழ்நாள் முழுவதும் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்றால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். வளர்சிதை மாற்றம் மற்றும் உடலின் ஆற்றல்களை அதிகரிக்க தினமும் காபி அல்லது டீ குடிப்பதற்கு முன்னதாக ஒரு பெரிய செம்பில் தண்ணீர் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் குறைந்தது 2-3 லிட்டர் இலக்கு வைத்து தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்.
வாழ்நாளில் மகிழ்ச்சியும், மனநிம்மதியும் எப்போதும் இருக்க வேண்டாம் என்றால், இன்றைய சூழலில் அதிகம் பலரும் பயன்படுத்தும் மொபைல் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. எழுந்தவுடன் தொலைபேசியை கையில் எடுத்துப் பார்க்கும் போது நம்மை அறியாமலேயே சோம்பலை அனுபவிப்பார்கள். எனவே எழுந்தவுடன் உடனே சுமார் 30 நிமிடங்களுக்கு மொபைல் போன் உபயோகிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
மேலும் படிக்க: குளிர்காலத்தில் உடல் எடையைக் குறைக்க பருக வேண்டிய பானங்கள்!
வாழ்க்கையில் எவ்வித சிக்கல்கள் வந்தாலும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு ஒரு புத்தகத்தில் 5 பக்கங்களைக் கட்டாயம் படிக்க வேண்டும். புராண கதைகள், வரலாற்று ஆய்வுகள் என்பதைத் தாண்டி உங்களுக்குப் பிடித்த கதைப் புத்தகங்களையாவது வாசித்துப் பழகவும். இத்தகைய செயல்கள் வாசிப்புத் திறனை அதிகரிப்பதோடு, பல அறிவார்ந்த தகவல்களையும் பெறுவதற்கு உதவியாக இருக்கும். வாழ்நாளில் சோம்பேறியாக இருந்தாலும் சில புத்தகங்கள் கட்டாயம் வாழ்க்கையில் புத்துணர்ச்சியடைய உதவக்கூடும்.
தங்களுடைய உடல் நலமும், மன நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 7500 அடிகள் நடக்க வேண்டும். காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது சுத்தமான காற்று மனதிற்கு இதமான சூழலைக் கொடுக்கும். இதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் ஏதுவாக இருக்கும்.
வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால், நல்ல தூக்கம் வேண்டும். கட்டாயம் இரவு 10 மணிக்குள் தூங்க வேண்டும். எந்தவித சாக்குப்போக்கும் சொல்லாமல் இரவு 10 மணிக்குள் தூங்கும் போது உடல் உறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுத்து, புத்துணர்ச்சிடைய உதவக்கூடும்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com