குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் முக்கியமானது உருளைக்கிழங்கு. காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட உருளைக்கிழங்கை பொரியல், சிப்ஸ் என செய்துக் கொடுத்தால் கொஞ்சம் கூட மீதம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அந்தளவிற்கு இதன் சுவை அனைவரையும் கட்டி இழுத்துவிடும். சுவை மட்டுமல்ல, உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், பிளாவனாய்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தையும் உடலுக்கு ஆற்றலை அளித்தாலும், அளவுக்கு மீறி சாப்பிடும் போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுபவர்கள் பலர் இருந்தாலும் உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இவற்றை அதிகமாக உட்கொள்ளும் போது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே முடிந்தவரை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, உடலில் அதிகளவு பொட்டாசியம் சேர்வதால் ஹைபர்கேமியா பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மூச்சுத்திணறல், உடல் வலி, வாந்தி போன்ற பல்வறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க: குழந்தை தூங்காம படாதபாடு படுத்துதா ? சீக்கிரமாக தூங்க வைக்க சூப்பரான 7 டிப்ஸ்
உருளைக்கிழங்கில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால், அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதற்கு வழிவகுக்கும். உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் சேரும் போது. உடல் பருமன் பாதிப்பை ஏற்படுத்தும்.
உணவு முறையில் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்ளும் போது வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதோடு உருளைக்கிழங்கில் உள்ள காரமான தன்மையால், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்ளும் போது இதில் உள்ள கார்போஹைட்டுகள் குதிகால், மூட்டு வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க: விளாம்பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்களா ? ஆஸ்துமா, செரிமானம், சரும பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு
முளைக்கட்டிய உருளைக்கிழங்கு, பச்சை நிறமுள்ள உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிடும் போது, உடலில் ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது உருளைக்கிழங்கை விஷத்தன்மையைக் கூட ஏற்படுத்தும். இதோடு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது பாதிப்பின் தன்மையை தீவிரப்படுத்தும்.
இதுபோன்ற பாதிப்புகளை அதிகளவு ஏற்படும் என்பதால், உருளைக்கிழங்கு பிரியர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் பல உடல் நல பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குப் பேருதவியாக உள்ளது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com