விளாம்பழத்தில் இவ்வளவு மருத்துவ பயன்களா ? ஆஸ்துமா, செரிமானம், சரும பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

விளாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பண்டிகை காலங்களில் இந்த பழத்தை நாம் சாப்பிட்டு இருப்போம். விளாம்பழத்தை யானை ஆப்பிள் என்றும் அழைக்கின்றனர். இதில் அதிகளவு நார்ச்சத்து இருக்கிறது.
image

டென்னிஸ் பந்து போல் தெரியும் விளாம்பழத்தின் வெளிப்புறம் சற்று கடினமான ஓடு அமைப்பிலும் உட்புறம் விதைகளோடு இனிப்பான மாவு போலவும் இருக்கும். சாப்பிடும் போது விதைகள் நீக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி, பொங்கல் கொண்டாட்டங்களில் சாமி படையலில் விளாம்பழம் இடம்பெறும். விளாம்பழம் அதன் நார்ச்சத்துக்காக அறியப்படுகிறது. செரிமானம், வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளுக்கு விளாம்பழம் சாப்பிடுவது நல்லது. அதே போல வைட்டமின் சி அதிகம். இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் விளாம்பழம் அதிகரிக்கும். இதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. இதை சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்காது. எனவே விளாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

wood apple benefits

விளாம்பழம் ஊட்டச்சத்து

100 கிராம் விளாம்பழத்தில் 120 கலோரிகள் உள்ளன. இதில் 3.5 கிராம் புரதம், 20.8 கிராம் கார்போஹைட்ரேட், 4.6 கிராம் நார்ச்சத்து, கால்சியம் 190 மில்லி கிராம், 230 மில்லி கிராம் பாஸ்பரஸ் இருக்கிறது. இரும்புசத்து, சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் விளாம்பழத்தில் அடங்கும்.

விளாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

ஆயுர்வேத பயன்

பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் விளாம்பழத்தை அதன் மருத்துவ பண்புகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இது சூப்பர்ஃபுட் என்றும் அறியப்படுகிறது. விளாம்பழ மரம், விளாம்பழ இலை, மரத்தின் வேர் மற்றும் பழத்தின் சத்து ஆகியவை ஆயுர்வேதத்தில் மூலிகைகள் தயாரிக்க பயன்பட்டுள்ளன.

செரிமானத்திற்கு உதவி

வயிற்றுபோக்கு, மலச்சிக்கல், செரிமான பிரச்னை போன்றவற்றுக்கு விளாம்பழம் சாப்பிடுவது நல்லது. இந்த பழம் குடல் சார்ந்த பிரச்னைகளை தீர்த்து செரிமானத்திற்கு உதவும்.

சரும ஆரோக்கியம்

விளாம்பழத்தின் நீர்ச்சத்து சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். சரும வறட்சியை தடுத்திடும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும எரிச்சலை போக்கும். பரு, தோல் அழற்சி ஆகியவற்றில் இருந்தும் விடுபடலாம்.

ஆஸ்துமா பிரச்னைக்கு தீர்வு

சுவாச அமைப்புக்கு விளாம்பழம் பெரிதளவு உதவுகிறது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் விளாம்பழம் சாப்பிட்டால் சுவாச கோளாறு, மூச்சு விடுவதில் சிக்கல் ஆகியவற்றை தவிர்க்கலாம்.

மேலும் படிங்கஉடல் நன்மைக்கு உணவில் ஒரு ஸ்பூன் பலாக்காய் மாவு சேருங்க; சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்

மாதவிடாய் பிரச்னையில் இருந்து விடுபட பெண்கள் தொடர்ந்து விளாம்பழம் சாப்பிடலாம். ஹார்மோன்கள் சீராகி முறையற்ற மாதவிடாய் பிரச்னை தீர்க்கப்படும். விளாம்பழம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல்நலப் பிரச்னைகளை
தவிர்க்கலாம். இதன் கிளைசெமிக் குறியீடு 38 மட்டுமே. விளாம்பழம் இரத்த சர்க்கரை அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் சர்க்கரை நோயாளிகள் தைரியமாக சாப்பிடலாம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP