herzindagi
image

குழந்தை தூங்காம படாதபாடு படுத்துதா ? சீக்கிரமாக தூங்க வைக்க சூப்பரான 7 டிப்ஸ்

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மிகவும் சிரமமாக கருதுவது அவர்களை தூங்க வைப்பது. இந்த பதிவில் குழந்தைகளை சீக்கிரமாக தூங்க வைக்க 7 சூப்பரான குறிப்புகளை பார்க்கலாம். இவற்றை தெரிந்து கொண்டால் நீங்கள் குழந்தைகளை தூங்க வைக்க படாதபாடு பட வேண்டியதில்லை.
Editorial
Updated:- 2025-01-19, 22:13 IST

எந்த வயதினராக இருந்தாலும் இரவு நேரத்தில் நன்றாக தூங்கினால் மட்டுமே காலையில் புத்துணர்வுடன் விழிக்க இயலும். குறிப்பாக குழந்தைகள் கட்டிலிலோ அல்லது தரையிலோ படுத்த 20 நிமிடங்களுக்குள் தூங்கி விடுவார்கள். ஒரு குழந்தை தூங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறதோ அதை பொறுத்து அவர்களுடைய உடல் எந்த அளவிற்கு தூக்கத்திற்கு ஏங்கியது என புரிந்து கொள்ளலாம். ஒரு சில சமயம் காலையில் தூங்கினால் இரவு நேர தூக்கம் பாதிக்கப்படும். தூங்குவதற்கு ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் அது அவர்களை தினமும் நன்றாக தூங்க உதவும். ஒரு சில குழந்தைகள் தூக்கத்தில் விழித்து கொள்வார்கள். இது அவர்களுடைய உடல் தானாக சரி செய்து கொள்ள வேண்டும். சில குழந்தைகள் நன்றாக தூங்கவில்லை என்றால் காலையில் சீக்கிரமாக விழித்து கொள்வார்கள். குழந்தைகளை சீக்கிரமாக தூங்க வைக்க சூப்பரான 7 குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளை தூங்க வைக்க டிப்ஸ்

தூக்க நேர வழக்கம்

குழந்தைகள் தூங்குவதற்கு ஒரு வழக்கத்தை ஏற்படுத்தினால் அவர்கள் தினமும் நன்றாக தூங்குவார்கள். குளிப்பதற்கு, சாப்பிடுவதற்கு எப்படி நேரம் ஒதுக்கிறோமோ அதை தூக்கத்திற்கும் ஒதுங்குங்கள். உதாரணமாக இரவு 10 மணி முதல் காலை 6-7 மணி வரை என 8 மணி நேர தூக்கத்தை முடிவு செய்து விட்டால் எக்காரணம் கொண்டும் இந்த நேரத்தை மாற்றாதீர்கள்.

மன அமைதி

தூங்கும் முன்பாக உங்களுடைய குழந்தையின் மனதை அமைதிப்படுத்த முயற்சியுங்கள். பிடித்தமான கதை படித்தோ, மகிழ்ச்சிகரமாக உரையாடியோ, இனிமையான பாடலை கேட்டோ குழந்தையின் மனதை அமைதிப்படுத்தலாம். உங்களுடைய குழந்தை படுத்த பிறகு அரை மணி நேரத்திற்கு மேலாக தூங்க தடுமாறினால் அவர்களுடைய மனம் அமைதி பெறவில்லை என அர்த்தம்.

மதிய நேர தூக்கம்

3-5 வயதிலேயே குழந்தைகள் மதிய நேர தூக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். கடுமையான உடல் சோர்வு இருந்தால் மதிய நேரத்தில் தூங்குவது அவசியமில்லை. எனினும் மதிய நேரத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் தூங்க அனுமதிக்காதீர்கள். மதிய நேரத்தில் நீண்ட நேரம் தூங்கினால் இரவு நேரத்தில் தூங்குவதற்கு குழந்தைகள் சிரமப்படுவார்கள்.

பாதுகாப்பான சூழல்

சில குழந்தைகள் தனியாக தூங்க பயப்படுவார்கள். இருட்டு என்றால் சில குழந்தைகளுக்கு பயம். பயம் காரணமாகவே பல குழந்தைகள் தனியாக தூங்க பயப்படுவார்கள். இரவு நேரத்தில் பயமுறுத்தும் நிகழ்ச்சிகள், படங்களை பார்க்க குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

மேலும் படிங்க  குழந்தை நல்லா படிக்கணுமா ? இந்த 7 வழிகளில் பெற்றோர்கள் உதவுணும்

அமைதியான தூங்குமிடம்

குழந்தைகளின் தூங்குமிடம் அமைதியாக இருக்க வேண்டும். தூங்குமிடத்தில் இரைச்சல் அல்லது வெளிச்சமாக இருந்தால் குழந்தைகள் சிரமப்படுவார்கள். தூங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக டிவி அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்த குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

ஆரோக்கியமான உணவு

இரவு நேரத்தில் குழந்தைகளை 8 -9 மணிக்குள் சாப்பிட வைத்துவிடுங்கள். சாப்பிடுவதற்கு தாமதம் ஆகினால் செரிமானத்தில் சிக்கல் ஏற்படும். இதனால் குழந்தைகள் தூங்குவதற்கு சிரமப்படுவார்கள். இரவு நேரத்தில் அதிகளவில் சாப்பிட அனுமதிக்காதீர்கள். காஃபி, டீ குடிப்பதையும் இரவு நேரத்தில் தவிர்க்கவும்.

கடிகாரம் தவிர்க்கவும்

தூங்கும் அறையில் கடிகாரம் வைக்காதீர்கள். குழந்தைகள் கடிகாரத்தை பார்த்து கொண்டே எப்போது தூங்கலாம் என காத்துக் கொண்டிருப்பார்கள்; காலையில் நேரம் ஆகிவிட்டதே என பதறி அடித்து எழுவார்கள். தூங்கும் நேரம் முக்கியமல்ல; தூக்கத்தின் தரம் முக்கியம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com