எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இல்லையா? இனி பழகிக்கோங்க;அவ்வளவு நன்மைகள் இருக்கு!

உடல் முழுவதும் மற்றும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் உடலுக்கு நன்மை அளிக்கும் பல சுரப்புகள் அதிகமாக சுரக்கின்றது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
image
image

நம்முடைய மூதாதையர்கள் பின்பற்றி வந்த பழக்கங்கள் எப்போதுமே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருந்து வருகிறது. சிறுதானிய உணவுகள், நஞ்சு இல்லாத காய்கறிகள், சரியான நேரத்திற்கு சாப்பிடுவது போன்ற நல்ல பண்புகளின் வரிசையில் தலைக்கு மட்டுமல்ல உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தான் என்னவோ? மருத்துவமனை வாசல்களில் அதிகளவில் அவர்கள் நின்றதில்லை. இன்றைய நிலை முற்றிலும் மாறிவிட்டது. வாரத்திற்கு ஒருமுறையாவது பலரது வீடுகளில் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் நிலையில் உள்ளோம். ஆரோக்கியமான முறையில் இதையெல்லாம் தவிர்ப்பது நல்லது. இன்றைக்கு உடல் ஆரோக்கியத்திற்கும், பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கும் எப்படி எண்ணெய் குளியல் உதவுகிறது? என அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • தீபாவளி போன்ற சில பண்டிகை காலங்கள் மட்டுமே தற்போது எண்ணெய் தேய்த்து குளிக்கின்றோம். கலாச்சார மாற்றத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, தலையில் எண்ணெய் வைத்தது கூட தெரியாமல் வைத்தோம் என்று கூறுகிறார்கள் இன்றைய தலைமுறையினர்.
  • எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது உடலில் உள்ள வாதம், பித்தம், கப தோஷங்கள் சீராகும். உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருப்பதோடு உடல் உஷ்ணத்தையும் குறைக்க உதவியாக உள்ளது.
  • தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து குளிக்கும் போது, மூளைப் பகுதியில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன் செயல்பாடு சீராவதோடு உடலின் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
  • பொதுவாக தலை அலசினாலே நன்றாக தூக்கம் வரம். அதிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். நல்ல தூக்கம் மனதை இதமாக்கும். புத்துணர்ச்சியோடு அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.
  • பெண்களின் முகத்தில் ஏற்படும் கருவளையங்களுக்கு முக்கிய காரணம் தூக்கமின்மை. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். உடலை குளிர்ச்சியாக்கி தசைகளை வலுப்பெறவும் செய்கிறது.
oil bath

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் குளியல்:

  • உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பெண்களின் கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்வதற்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
  • பொடுகுத் தொல்லை இருக்கும் பெண்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்த பின்னதாக தலை அலசவும். கொஞ்சம் வேப்பிலை சாறையும் எண்ணெய் தேய்த்து உபயோகிப்பது நல்லது.

மேலும் படிக்க:உங்களது நாளை தக்காளி ஜூஸ்வுடன் தொடங்கினால் போதும் வியக்கத்தகு நன்மைகள் காத்திருக்கு!

  • இளநரை பிரச்சனையால் அவதிப்படும் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தலைக்கு நல்ல எண்ணெய் தேய்ப்பது அவசியம். வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது, ஷாம்புகள் உபயோகிப்பதைத் தவிர்த்து விட வேண்டும். அதற்கு மாற்றாக மருதாணி, வேப்பிலை, கரிசலாங்கண்ணி போன்ற இலைகளை அரைத்துத் தேய்க்கலாம்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றாலே நல்லெண்ணெய் தான் உபயோகிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நல்லெண்ணெய் உடல் சூட்டிற்கு நல்லது தான். ஒருவேளை சுத்தமாக கிடைக்கவில்லையென்றால் அந்த தேங்காய் எண்ணெய் உபயோகித்துக் கொள்ளலாம்.

Image source - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP