herzindagi
image

உச்சி முதல் பாதம் வரை; பதிமுக தண்ணீர் குடிங்க ஆரோக்கியம் பெறுங்க

பதிமுக தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பதிமுக தண்ணீர் பல நோய்களை குணப்படுத்தும் என நம்பப்படுகிறது.
Editorial
Updated:- 2024-12-10, 17:57 IST

மருத்துவ தாவரமான பதிமுகம் பல ஆண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் காணப்படும் இந்த மரம் கிழக்கு இந்தியாவின் ரோஸ்வுட் என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பதிமுக தண்ணீர் கொடுப்பது வழக்கம். இது உணவுகளில் இயற்கை நிறமியாக பயன்படுத்தப்படுகிறது. பதிமுகத்தில் உள்ள பிரேசிலின் என்ற சேர்மம் சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. ஆயுர்வேதத்தின்படி பதிமுக தண்ணீரில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. பதிமுக தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேற்றப்படும். குடல் ஆரோக்கியமும் மேம்படும். பிரேசிலின் என்ற சேர்மத்தை கொண்டு காட்டன், சில்க், கம்பிளி ஆகியவற்றில் சிவப்பு நிற சாயம் ஏற்றலாம். கேரளாவில் இதை மூலிகை தண்ணீர் என்றழைக்கின்றனர்.

pathimugam

பதிமுக தண்ணீர் தயாரிப்பது எப்படி ?

  • பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் கொதிக்கவிடுங்கள்.
  • இதில் அரை டீஸ்பூன் பதிமுகம் சேர்க்கவும்.
  • சில நிமிடம் கொதிக்கவிட்டால் தண்ணீர் பிங்க் நிறத்திற்கு மாறும்
  • அடுப்பை ஆப் செய்துவிட்டு வடிகட்டுங்கள்.
  • வெதுவெதுப்பான சூட்டில் பதிமுகம் குடிக்கவும்.

சிலர் பதிமுக தண்ணீரில் கொத்தமல்லி விதைகள், இஞ்சி, ஏலக்காயை இடித்து சேர்த்து குடிக்கின்றனர். இவற்றை சேர்ப்பதால் பதிமுக தண்ணீரின் சுவையும் அதிகரிக்கிறது.

வாய் ஆரோக்கியம்

பல் சிதைவுக்கு காரணமான ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பாக்டீரியாவை எதிர்த்து பதிமுக தண்ணீரின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் போராடுகின்றன.

இதய ஆரோக்கியம்

பதிமுக தண்ணீரில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்கள் உள்ளன. இவை இதய செயல்பாடுகளை மேம்படுத்தும்.

சரும நலன்

பதிமுகத்தில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சருமப் பிரச்னைக்கு தீர்வளித்து பளபளப்பாக்கிடும்.

இரத்த சுத்திகரிப்பு

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளை சீராக்குவதால் சர்க்கரை நோயாளிகள் பதிமுக தண்ணீரை கட்டாயம் குடிக்கலாம். இது இரத்த அழுத்ததையும் குறைக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை தவிர்க்க விரும்பினால் பெண்கள் பதிமுக தண்ணீர் குடிக்கலாம்.

மேலும் படிங்க கொடுக்காய்ப்புளி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பதிமுக தண்ணீர் தினமும் குடிக்கலாமா ?

பதிமுக தண்ணீரை தினமும் குடிப்பதில் தவறில்லை. உடலில் உள்ள நச்சுகள், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படும். செரிமானத்திற்கு பதிமுக தண்ணீர் கட்டாயமாக உதவும். அதோடு ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் எளிதில் உறிஞ்சப்படும். அல்சர் பிரச்னைக்கு பதிமுக தண்ணீர் பயனளிக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. உடல் சூட்டையும் எளிதில் குறைக்கும்.

பதிமுக தண்ணீரை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். எனேனில் அதிகளவு நச்சுகள் ஒரே நேரத்தில் வெளியேறினால் கர்ப்ப பையில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com