இனிப்பு, புளிப்பு சுவை கலந்த கொடுக்காய்ப்புளியில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல விஷயங்கள் இருக்கின்றன. இதை சாப்பிடுவதால் ஒருவரின் ஆரோக்கியம் மேம்படும்.வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு தீர்வு, பற்களின் வலு மற்றும் சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பலவற்றுக்கு கொடுக்காய்ப்புளி உதவும். கொடுக்காய்ப்புளி குறிப்பிட்ட அளவு கலோரி, புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, உடலுக்கு தேவையான ஆற்றல்
ஆகியவற்றை வழங்குகிறது. அதே போல கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி, பி உள்ளது.
கொடுக்காய்ப்புளியில் உள்ள நார்ச்சத்து நம் வயிற்றை முழுமையாக உணர
வைத்து பசியை கட்டுப்படுத்தும். கொடுக்காய்ப்புளியை அரைத்து ஒரு டம்ளர்
எலுமிச்சை ஜூஸில் கலந்து குடித்தால் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக தோன்றலாம்.
கொடுக்காய்ப்புளியில் ஃபிளாவனாய்டு மற்றும் குர்செடின் போன்ற ஆன்டிஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளன. இதை சாப்பிட்டால் வயிறு, குடலில் உள்ள நச்சுகள், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படும். வயிற்று போக்கு பிரச்னையும் குணமாகும்.
சர்க்கரை நோயாளிகள் கொடுக்காய்ப்புளி சாப்பிடுவது மிகவும் நல்லது. இதன் மருத்துவ குணங்கள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளை சீராக வைக்கும்.
கொடுக்காய்ப்புளியில் அதிகளவிலான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. மேலும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இரண்டு முக்கிய தாதுக்களும் இருக்கிறது. கொடுக்காய்ப்புளியின் புரதச்சத்து நம் உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். உடல் சோர்வாக இருந்தால் கொடுக்காய்ப்புளி சாப்பிடுங்கள்.
கொடுக்காய்ப்புளியில் உள்ள வைட்டமின் சி பயனுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் ஆகும். இதை ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் கலந்து குடிக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமத்திற்கும் வைட்டமின் சி நல்லது. சருமத்தில் பறு, கருமை இருந்தால் கொடுக்காய்ப்புளி சாப்பிட்டு பயன் பெறலாம்.
மேலும் படிங்க சருமம் ஜொலிக்க, தலைமுடி பளபளக்க தினமும் 2 ஸ்பூன் நெய் சாப்பிட்டு பல நன்மைகளை பெறுங்க
பற்களின் எனாமல்-ஐ வலுப்படுத்தும் தாதுக்களான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் கொடுக்காய்ப்புளியில் உள்ளது. இதன் மருத்துவ குணங்கள் வாய் புண்களையும் குணப்படுத்தும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை கொடுக்காய்ப்புளி கட்டுப்படுத்தும் என்பதால் இதய நோய் அபாயத்தையும் தடுக்கலாம். அளவுக்கு மீறி சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு என்பது போல கொடுக்காய்ப்புளியும் அதிகளவு சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்பட்டு கிட்னி பாதிக்கப்படும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com