1 மாதம் மது அருந்தாமல் இருந்தால் உடலில் நடக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

நீங்களும் மது அருந்துகிறீர்களா? 30 நாட்களுக்கு மது அருந்துவதை நிறுத்தினால் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

alcohol card image ()

இப்போதெல்லாம் மது அருந்துவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. விசேஷ நேரங்களில் மட்டும் மது அருந்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது ஆனால் அதற்கு அடிமையாகும்போது தான் உடலிலும் மனதிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகலாம். நீங்களும் மது அருந்துபவர்களாக இது உங்களுக்கான கட்டுரையாகும். ஒரே வேலை நீங்கள் மதுவிலிருந்து ஒரு மாதம் விலகி இருந்தால் அது உங்கள் உடலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்? இதுகுறித்து சுகாதார நிபுணர் பின்னி சவுத்ரி கூறிய தகவல்.

1 மாதம் மதுவை கைவிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

liver inside

கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது நச்சுகளை செயலாக்க கடினமாக உழைக்கிறது. மேலும் நீங்கள் மது அருந்தும்போது அதன் அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் ஒரு மாதத்திற்கு மதுபானத்திற்கு ஓய்வு எடுத்தால் உங்கள் கல்லீரல் சிறப்பாக செயல்பட தொடங்கும். கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இந்த இடைவெளியில் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

sleep inside

1 மாதம் மதுவை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. உடல் நீரேற்றமாக இருக்கும் மற்றும் நாள் முழுவதும் அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள். ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் போது நமது தூக்க சுழற்சியை மோசமாக பாதிக்கிறது மற்றும் மது அருந்துபவர்கள் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உங்கள் தூக்கம் மேம்படுவதால் மன நிலையும் மேம்படுகிறது. மது அருந்தினால் அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இது மிகவும் கவலையடையக்கூடிய ஒரு விஷயம் தான். ஒரு நபர் மதுவை விட்டு விலகி இருக்கும் போது அவருக்குள் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு நபரின் நினைவாற்றல் மற்றும் கவனம் செலுத்தும் திறன் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க: கோடைக்காலத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தின் ஜூஸ் விறுவிறுவென உடல் எடையை குறைக்கும்

30 நாட்களுக்கு மதுவைக் கைவிடுவதன் மூலம் உங்கள் வளர்சிதை மேம்படுகிறது. உடலில் இருந்து நச்சுகள் அகற்றப்பட்டு. உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியும் வலுப்பெறுகிறது. இதன் மூலம் பல நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP