பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், செரிமான அமைப்பை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகின்றது. ஆனால் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், டீயாக செய்து குடிப்பதன் மூலம் அதன் ஆரோக்கியம் நிறைந்த நன்மைகளையும் முழுமையாக நம்மால் பெற முடியும் என்று நாங்கள் உங்களுக்கு நிரூபணத்துடன் கூறினால் உங்களால் அதை மறுக்க முடியுமா?
பூண்டு டீயுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். தேன், எலுமிச்சை மற்றும் பூண்டு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மூலிகை டானிக் தான் பூண்டு டீ ஆகும். உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள இது ஒரு சிறந்த வழியாகும். பூண்டு டீ அதிக பசியைத் தூண்டும் பானமாக இல்லாவிட்டாலும், இந்த பூண்டு டீயில் வைட்டமின்கள் A, B மற்றும் C, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் சல்பர் நிறைந்துள்ளது என்பதே உண்மை. பூண்டு டீ உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்குமா? இதை அறிய, MY2BMIயின் நிறுவனரும் ஊட்டச்சத்து நிபுணருமான செல்வி.ப்ரீத்தி தியாகியிடம் பேசினோம்.
இதுவும் உதவலாம் :தினமும் ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும்?
நிபுணர் கருத்து
செல்வி.ப்ரீத்தி தியாகி கூறுகையில், “பூண்டு அல்லியம் எனும் (வெங்காயம்) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். ஒரு பூண்டின் ஒவ்வொரு பகுதியும் , பூண்டு பல் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பூண்டில் சுமார் 10-20 பூண்டு பற்கள் இருக்கும். பூண்டு உலகின் பல பகுதிகளில் வளர்கிறது மற்றும் அதன் திடமான வாசனை மற்றும் சுவை காரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருட்களில் ஒன்றாக பூண்டு உள்ளது. பூண்டு எக்கச்சக்கமான சத்துக்கள் நிறைந்தது.
தினசரி தேவைக்கு ஏற்ப ஒரு பல் (3 கிராம்) பச்சை பூண்டில்
- மாங்கனீசு: 2%
- வைட்டமின் B6: 2%
- வைட்டமின் சி: 1%
- செலினியம்: 1%
- நார்ச்சத்து : 0.06 கிராம் கொண்டுள்ளது.
இது தவிர, இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், செம்பு மற்றும் வைட்டமின் B மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் கொண்டுள்ளது. பூண்டு டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்கள் தான் உலகில் பல உயிர்களை பலி வாங்கும் வியாதிகள். இது போன்ற நோய்களின் மிக முக்கிய ஆதாரமாக இருப்பதில் உயர் ரத்தம் அழுத்தத்திற்கும் பங்குண்டு. அதனால்தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க பூண்டு டீயை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. அதன் பலன்களைப் பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம். முதலில், நாம் வீட்டிலேயே பூண்டு டீ தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
வீட்டிலேயே பூண்டு டீ தயாரிப்பது எப்படி?
- ஒரு கப் தண்ணீரில் 2 முதல் 3 பூண்டு பற்கள் எடுத்து அவற்றை பாதியாக நறுக்கி தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும், நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
- நீங்கள் விரும்பப்பட்டால், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கொள்ளலாம்.
- உங்கள் பூண்டு டீ தயார்.
- டீயை வடிகட்டி குடிக்கவும்.

உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும்
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், பூண்டு டீ உங்களுக்கு மிகுந்த பயன் தரும். ஏனெனில் இந்த டீ கொழுப்பை குறைக்க செய்யும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் பசியை அடக்கி விடும்.
சுவாச மண்டலத்துக்கு நலம் பயக்கும்
பூண்டு டீயில் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் உள்ளன. இதனால் உங்களுக்கு சளி, இருமல், சைனஸ் தொற்று, காய்ச்சல், தொண்டை கட்டு அல்லது தொண்டை புண் ஆகிய ஏதேனும் இருந்தால் அவற்றை போக்கி விடும். இந்த ஒரு முக்கிய காரணத்திற்காக, பூண்டு ஆஸ்துமா நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பூண்டு மிகச்சிறப்பாக செயலாற்றுகிறது. இதில் அல்லிசின் நிறைந்துள்ளது. இது ஒரு ஆர்கனோசல்பர் கலவை ஆகும். இந்த கலவையானது இதய நோய் உள்ளவர்களில் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் வளர்ச்சியைத் தடுக்க துணை புரிகிறது. பூண்டு டீ சீரான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவைக் குறைக்கிறது மற்றும் தமனிகளில் பிளேக் அடைக்காமல் தடுக்கிறது, இதனால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
இதுவும் உதவலாம் :கோடையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லதா?
நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்
பூண்டில் உள்ள அல்லிசின் ஆன்டி ஃபங்கல், ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளுடன் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அவை உங்கள் உடலை பாக்டீரியா மற்றும் பிற கொடிய நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலமாக வைத்திருக்கின்றன. எனவே, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த, கட்டாயமாக உங்கள் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation