herzindagi
labour pain image

Labor pain Food: ஒரே ஒரு பழம் சாப்பிட்டால் போதும் பிரசவ நேரத்தில் வலி குறைவாக இருக்கும்!!

கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்தின் போது வலி குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பிரசவ வலியைக் குறைக்க உதவும்  அதிசய உணவைப் பற்றி பார்க்கலாம்
Editorial
Updated:- 2023-08-10, 22:55 IST

பெண்கள் தாயாக மாறும் பயணம் மிகவும் அழகானது ஆனால் இந்த பயணத்தில் பல சிரமங்கள் உள்ளன. கர்ப்ப காலத்தில் ஏற்படும்  ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பிரசவ வலி இது போன்ற பிரச்சனைகளை பெண்கள் நிறைய எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பது தொடர்பான பல தகவல்களை தெரிந்து வைத்திருப்போம். 

கர்ப்ப காலத்தில் நிச்சயமாக ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தை வயிற்றில் சரியாக வளரும் மற்றும் தாயும் ஆரோக்கியமாக இருக்க முடியும். பிரசவ வலி மிகவும் கடினமான வலிகளில் ஒன்றாகும். இந்த வலியைக் குறைக்க உணவில் சில மாற்றங்களைச் செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்பத்தின் கடைசி மாதத்தில் சில உணவுகளை சாப்பிட்டால் பிரசவ வலியை வெகுவாகக் குறையும்.  உணவியல் நிபுணர், பொது சுகாதார நிபுணர், ஸ்வாதி பத்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு அதிசய உணவைப் பற்றி பார்க்கலாம். 

 

இந்த பதிவும் உதவலாம்:  பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மறைக்க எளிதான வீட்டு வைத்தியம்!!

பேரிச்சம்பழம் 

dates pregancy

பேரிச்சம்பழம் பல குணங்கள் நிறைந்தது. தசைப்பிடிப்பு குணப்படுத்துவது முதல் உடலில் உள்ள இரத்த சோகையை குறைப்பது வரை பேரீச்சம்பழத்தில் பல நன்மைகள் உள்ளன. பிரசவ வலியைக் குறைப்பதிலும் பேரிச்சம்பழம் நன்மை பயக்கும். பேரீச்சம்பழத்தின் வரலாறு சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. இது பிரசவ வலியின் நேரத்தைக் குறைத்து பிரசவத்தை எளிதாக்குகிறது. இது கருப்பையின் சுருக்கத்திற்கு உதவுகிறது. புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பேரீச்சம்பழம் கர்ப்பத்திற்குப் பிறகு இரத்த இழப்பையும் குறைக்கிறது. 

பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டிய முறை

dates pregant

  • கர்ப்பிணிகள் மூன்றாவது மாதங்களில் பேரீச்சம்பழம் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

 

  • கர்ப்பத்தின் 38வது வாரத்தில் இருந்து பேரீச்சம்பழம் சாப்பிட ஆரம்பிக்கலாம்.

 

  • ஒரு நாளைக்கு 6 பேரிச்சம்பழங்கள் வரை சாப்பிடலாம்.

குறிப்பு  

எல்லாப் பெண்களின் கர்ப்பப் பயணமும் பிரசவ வலி நேரமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. பேரீச்சம்பழம் பிரசவ வலியைக் குறைக்கும் என்றாலும், கர்ப்ப காலத்தில் உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், ஒருமுறை உங்கள் மருத்துவரை அணுகவும்.

இந்த பதிவும் உதவலாம்: தாய்ப்பால் இல்லையா... தாய்ப்பால் சுரக்க சிறந்த உணவுகள் இதோ!!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com