
யோகா உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்றைய காலகட்டத்தில் இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள மக்கள் யோகாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். யோகா பயிற்சியின் மூலம் பல வகையான பிரச்சனைகளை மருந்து இல்லாமல் தீர்க்க முடியும். யோகா செய்யும் போது மிகவும் பசியாகவோ அல்லது ஆற்றல் இல்லாதவர்களாக உணர்ந்தால், நீங்கள் யோகா செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் கனமான உணவை உண்பதைத் தவிர்த்து சிறிது எளிதான காலை உணவை உட்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. யோகா நிபுணருமான ஜிதேந்திர கௌஷிக், யோகா அமர்வுக்கு முன் உட்கொள்ளக்கூடிய சில உணவுகளைப் பற்றி கூறியுள்ளார்.
மேலும் படிக்க: அடடா.! இத்தனை மருத்துவ அதிசயங்களா வாழைக்காயில்

யோகாக்கு முன் நார்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. வாழைப்பழம் அல்லது ஆப்பிள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தருகின்றன, அதே நேரத்தில் அவற்றை உட்கொள்வது உங்கள் செரிமான அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தாது. நீங்கள் ஆப்பிளுடன் வேர்க்கடலை வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது சிறிது தயிருடன் பெர்ரி பழங்களை சாப்பிடலாம்.

யோகா செய்வதற்கு முன் நீங்கள் நட்ஸ் வகைகளை உட்கொள்ளலாம். ஒரு சில பாதாம் பருப்புகள் அல்லது உங்களுக்கு பிடித்த நட்ஸ் வலைகளில் ஏதேனும் புரதம் மற்றும் கொழுப்புகளின் நல்ல கலவையாக இருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். பூசணி விதைகள் போன்ற சில விதைகளையும் உட்கொள்ளலாம்.

ஓட்ஸ் யோகா செய்வதற்கு தொடர்ச்சியான ஆற்றலை அளிக்கிறது. நீங்கள் விரும்பினால், கூடுதல் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக ஓட்மீலில் சில பழங்கள் அல்லது நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். இருப்பினும் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது, அதன் அளவை நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
யோகா செய்வதற்கு முன் இளநீரை உட்கொள்ளலாம். ஏனென்றால், எந்த விதமான உடல் செயல்பாடுகளுக்கும் முன் உடலில் நீர்ச்சத்து குறைவதை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். இளநீர் குடிப்பது மிகவும் நல்லது. இது உடலில் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புகிறது.
மேலும் படிக்க: சத்துகள் நிறைந்த நெல்லிக்காயை ஈசியா உணவில் சேர்த்துக்கொள்ள 5 வழிகள்
யோகா அமர்வுக்கு சற்று முன்பு நீங்கள் எதையும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் குறைந்தது அரை முதல் ஒரு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். மேலும், இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மற்றும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit- freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com