Dengue Diet Food: டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடையச் சாப்பிட வேண்டிய உணவுகள்

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு தீவிர நோய். டெங்குவால் பாதிக்கப்பட்டால் மீள்வது கடினமாகிவிடுகிறது. இருப்பினும் சிக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்ப சாப்பிட வேண்டிய உணவவுகள்

Diet For Dengue Patients

மழைக்காலத்தில் டெங்குவின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இது கொசு கடித்தால் பரவும் வைரஸ் தொற்று ஆகும். டெங்குவால் பாதிக்கப்படும் போது நோயாளிக்கு அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, சோர்வு மற்றும் தோல் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சில நேரங்களில் இந்த நோயின் ஆபத்து மிகவும் அதிகரித்து உயிருக்கு ஆபத்தில் கொண்டு செல்கிறது. டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைய மருத்துவர்கள் மருந்துகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அதே வேலையில் சில உணவுப் பொருட்கள் உதவியுடன் நீங்கள் எளிதாக குணமடையலாம். எந்தெந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். மன்ப்ரீத் கவுர் பால், நிர்வாக ஊட்டச்சத்து நிபுணர், ஃபரிதாபாத், Cloudnine Group of Hospitals இதைப் பற்றிய தகவல் அளித்துள்ளார்.

டெங்குவில் இருந்து விரைவில் குணமடைய உணவுகள்

  • டெங்குவின் போது நீரிழப்பு ஒரு பெரிய பிரச்சனையாகும் இதனால் முடிந்தவரை அதிக திரவங்களை உட்கொள்ளுங்கள். நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
drinking water inside
  • உங்கள் உணவில் தேங்காய் நீரை சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது உடலில் திரவ சமநிலையை பராமரிக்கிறது. நீங்கள் ஆரஞ்சு சாறு அல்லது கிவி சாறு போன்ற பழச்சாறுகளையும் குடிக்கலாம். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • உங்கள் உணவில் மூலிகை தேநீரையும் உட்கொள்ள வேண்டும். இஞ்சி, துளசி, புதினா, ஏலக்காய் ஆகியவற்றால் செய்யப்பட்ட தேநீர் அருந்தலாம். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, உடலைத் தளர்த்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
papaya laef inside
  • பப்பாளி இலை மற்றும் பழச்சாறு குடிப்பது டெங்குவுக்கு நன்மை பயக்கும். பப்பாளி ஜூஸ் குடிப்பதால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீங்கள் Giloy சாறு குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மூலிகை.
  • பூசணி விதைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும் துத்தநாகம் இருப்பதால் அவற்றை உட்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி விதைகளை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.
  • டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் நோயாளிகள் அதிகம் கீரை வகைகள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். இதில் சூப் செய்து குடிக்கலாம். இவை அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP