நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். இது உடலின் நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்திற்கு உதவவும் மற்றும் ஆற்றலை சேமிக்கவும் பயன்படுகிறது. இருப்பினும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் சீரற்ற வாழ்க்கை முறை காரணமாக, பலர் ஃபேட்டி லிவர் எனும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
மேலும் படிக்க: சிறுநீர்ப்பாதை தொற்றை குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்திய முறைகள்; இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு குவியத் தொடங்கும் போது, அதன் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சீர்குலையும். இந்த நோய் முதல் நிலை அல்லது இரண்டாம் நிலையில் கண்டறியப்பட்டால், ஒரு சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதனை முழுமையாக குணப்படுத்த முடியும். கல்லீரல் ஆரோக்கியத்திற்கான எளிய வழிமுறைகள்,
ஃபேட்டி லிவர் நோயை தடுக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் பெரிதும் உதவும். அவற்றை விரிவாக பார்க்கலாம்.
தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஜாகிங், நீச்சல் அல்லது நடைபயிற்சி போன்ற கார்டியோ (Cardio) உடற்பயிற்சிகளை மேற்கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் கல்லீரலுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இது ஒட்டுமொத்த உடல் கொழுப்பை குறைக்க உதவுவதுடன், கல்லீரலில் சேரும் கொழுப்பையும் குறைக்கிறது.
கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மது அருந்துதல் ஆகும். மதுவை தவிர்ப்பது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மேலும் சேதம் ஏற்படுவதை தடுக்கவும் உதவும். புகைபிடிப்பதும் கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கிறது. கல்லீரல் ஆரோக்கியத்திற்காக இவை இரண்டையும் முற்றிலுமாக தவிர்ப்பது அவசியம்.
மேலும் படிக்க: எண்ணெய் தேய்த்து குளிப்பதன் அற்புத பயன்கள்; சரும பாதுகாப்புக்கான ரகசியம் இதோ!
தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியம். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற நீர் உதவுகிறது. இது கல்லீரலின் இயற்கையான நச்சு நீக்கும் செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது. உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது கல்லீரலையும், உடலையும் திறம்பட செயலாற்ற உதவுகிறது.
அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்த உணவுமுறை கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும். திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, கேரட் மற்றும் கீரை போன்ற உணவுகள் சிறந்த பலன் தரும். இந்த உணவுகள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலை பாதுகாக்க உதவுகின்றன.
நீங்கள் ஃபேட்டி லிவர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தவறாமல் மருத்துவரை ஆலோசித்து உங்கள் முன்னேற்றத்தை கண்காணிப்பது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com