
கோடைக்காலம் முடிந்துவிட்டாலும் அதன் தாக்கத்தால் பலரது சருமம் கருமையாக மாறி இருக்கும். இதனை போக்குவதற்கு எளிதாக வீட்டிலேயே ஐந்து ஃபேஸ்பேக் தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கான செயல்முறையை இந்தக் குறிப்பில் பார்ப்போம்.
மேலும் படிக்க: Korean hair care: இளம் தலைமுறையினர் விரும்பும் கொரியன் ஹேர் ஸ்டைல் வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
கடலை மாவு சருமத்தை சுத்தம் செய்து பிரகாசமாக்க உதவுகிறது. மஞ்சள் இயற்கையான கிருமிநாசினியாக செயல்படுகிறது. 2 தேக்கரண்டி கடலை மாவுடன், கால் தேக்கரண்டி மஞ்சள் மற்றும் 1 தேக்கரண்டி பால் சேர்த்து பசை போல் கலக்கவும். இதை முகத்தில் தடவ வேண்டும். இது காய்ந்த பின், தண்ணீரில் மெதுவாக தேய்த்து கழுவி விடவும்.
தக்காளி மற்றும் எலுமிச்சை சருமத்தில் உள்ள கருமையை குறைக்க உதவும். நன்கு பழுத்த ஒரு தக்காளியை அரைத்து, அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் 10-15 நிமிடங்கள் தடவி, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

இந்த இரண்டு பொருட்களும் சருமத்திற்கு இதமான உணர்வை தந்து, வெப்பத்தால் ஏற்பட்ட எரிச்சலை குறைத்து, சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்யும். 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் உடன் 1 தேக்கரண்டி வெள்ளரி சாறு கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.
மேலும் படிக்க: தயிர் இருந்தால் போதும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம்!
தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர். அதே சமயம், எலுமிச்சை கருமையை போக்கும். 1 தேக்கரண்டி தேனுடன், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருமை படிந்த இடங்களில் தடவவும். இதை 15-20 நிமிடங்கள் ஊறவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

பப்பாளியில் உள்ள பாப்பைன் (papain) என்ற நொதி, சருமத்தில் கருமையை போக்கவும், நிறத்தை மெருகேற்றவும் உதவுகிறது. நன்கு மசித்த 2 தேக்கரண்டி பப்பாளியுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் 15-20 நிமிடங்கள் தடவி, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இந்த ஐந்து ஃபேஸ் மாஸ்க்குகளையும் வாரம் இருமுறை பயன்படுத்தினால், சருமத்தில் இருக்கும் கருமை நீங்கி, உங்கள் முகம் பொலிவு பெறும். இதில் ஏதேனும் ஒரு பொருளை பயன்படுத்தும் முன், சிறிய அளவில் உங்கள் கைகளில் தடவி ஒவ்வாமை ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com