
பெரும்பாலான மக்கள் மாலையில் சிறிது பசியுடன் இருப்பார்கள். மதிய உணவுக்கும் இரவு உணவிற்கும் இடையில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு. பெரும்பாலான மக்கள் மாலையில் வேலையில் இருப்பார்கள் அல்லது வீடு திரும்பும் கொண்டு இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் மாலைப் பசியை போக்க தெரு உணவு அல்லது ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடுகிறார்கள். வயிறு நிரம்பிய உணவு உண்பது உடல் நலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
உணவியல் நிபுணர் கூறும் சில ஆரோக்கியமான சிற்றுண்டிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம், நீங்கள் மாலையில் இவற்றை சாப்பிட்டால் அது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது குறித்த தகவலை உணவியல் நிபுணர் மன்பிரீத் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க கடினமாக உள்ளதா, விதைகளை கொண்டு இப்படி ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுங்க!

மாலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதை உண்பதால் வயிறு நிரம்புவதுடன் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். பாதாம் வெண்ணெய் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. வயிற்றை நிரம்ப வைக்கும் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. அதேசமயம் ஆப்பிள் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மாலையில் பசி எடுக்கும் போது சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. மாலையில் பசியுடன் இருக்கும்போது காய்கறி சூப் சாப்பிடுங்கள் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த சூப் மிகவும் சத்தானது. இது உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு நீரிழப்பையும் விடாது.

மாலையில், நறுக்கிய ஆப்பிளுடன் கெமோமில் டீ எடுத்துக் கொள்வது நல்லது. கெமோமில் என்ற பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் . இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் காணப்படுவதால் இதயம், தோல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. உடலில் பல வகையான பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கிறது. ஆப்பிள் துண்டுகளை சேர்த்து சாப்பிட்டால் வயிறு நிரம்பி ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிட மனம் வராது.
இந்த பதிவும் உதவலாம்: ஆயுர்வேதத்தின் படி காலையில் ஸ்மூத்திஸ் எடுத்துக்கொள்வது நல்லதா?
உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் கட்டுரையின் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எங்கள் கட்டுரைகள் மூலம் உங்கள் சிக்கலை தீர்க்க முயற்சிப்போம்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Herzindagi-யுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com