smoothies big image ()

Smoothies is good for Health?:ஆயுர்வேதத்தின் படி காலையில் ஸ்மூத்திஸ் எடுத்துக்கொள்வது நல்லதா?

பலர் காலை உணவில் ஸ்மூத்திகளை குடிக்க விரும்புகிறார்கள். ஸ்மூத்திகளைப் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை நிபுணர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
Editorial
Updated:- 2023-06-23, 18:22 IST

ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமாக இருக்க உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றை சாப்பிடுவதற்கான சரியான நேரம் ஆகியவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாம் என்ன சாப்பிடுகிறோம், எந்த உணவு கலவைகளை சாப்பிடுகிறோம், எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம், இவை அனைத்தும் நம் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயுர்வேதம் ஆரோக்கியமானவை என்று கருதாத பல விஷயங்கள் ஆரோக்கியமான விஷயங்கள் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்துள்ளன. இன்றைய காலகட்டத்தில் எடை இழப்புக்கான ஆரோக்கியமான உணவு விருப்பமாக ஸ்மூத்திகள் மிகவும் பிரபலமாக உள்ளன. மக்கள் காலை உணவில் சாப்பிட விரும்புகிறார்கள்.

ஸ்மூத்திஸ் பல பழங்கள் மற்றும் ஆரோக்கியமான பொருட்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இன்றைய காலத்தில் ஸ்மூத்திகளை அருந்தும் போக்கு அதிகரித்துவிட்டாலும், ஆயுர்வேதம் அதை ஆரோக்கியமானதாக கருதுகிறதா? ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நித்திகா கோஹ்லிக்கு ஸ்மூதிஸ் பற்றிய கூறியிருக்கிறார்

ஸ்மூத்திஸ் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

smoothies

  • ஆயுர்வேதத்தின் படி இந்த கலகட்டத்தில் மக்கள் உட்கொள்ளும் மிகவும் தவறான உணவு ஸ்மூத்திகள். இவை பெரும்பாலும் சிட்ரஸ் பழங்கள் கலந்து பாலுடன் கலக்கப்படுகின்றன.

 

  • ஆயுர்வேதத்தின் படி புளிப்பு தன்மை கொண்ட பழங்கள் பாலுடன் கலப்பது சரியானதல்ல. பால் இனிப்பானது இவை இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலந்தால் எதிரெதிர் சாறுகளை கலக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 

  • இந்த இரண்டு எதிரெதிர் சாறுகளின் கலவையை நமது செரிமான அமைப்பு ஜீரணிக்க முடியாது. இதனால் உடலில் நச்சுகள் உற்பத்தியாகின்றன. செரிமானம் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

 

  • ஸ்மூத்திஸ் குளிர்ச்சியானவை இதனால் ஆயுர்வேதத்தின்படி குளிர்ந்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும் இன்பதால் செரிமான தீயை பாதிக்கிறது.

smoothies

  • ஸ்மூத்திகளில் எதுவும் சமைக்கப்படுவதில்லை, இவை அனைத்தும் மூலப்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேதத்தின் படி மூல உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும்.

 

  • உணவுகள் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால் வயிற்றில் அழுக ஆரம்பித்து ஈஸ்ட், பாக்டீரியாவை ஊக்குவிக்கின்றன.

 

  • சில சமயங்களில் ஸ்மூத்திகளில் பாலுக்குப் பதிலாக தயிருடன் பழங்கள் கலக்கப்படுகின்றன அல்லது சில பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த இரண்டு உணவுக் கலவைகளும் சரியானவை அல்ல.

உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், கட்டுரையின் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எங்கள் கட்டுரைகள் மூலம் உங்கள் சிக்கலை தீர்க்க முயற்சிப்போம்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க herzindagi-யுடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com