
கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் பெரும்பாலான மக்கள் மாலை அணிந்து கடவுள் வழிபாடு மேற்கொள்வார்கள். இதற்காக அதிகாலையில் எழுந்து நீராடுவது முதல் பெண்கள் காலையில் வீட்டு வாயில்களில் கோலம் இடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். அதீத கடுமையான குளிர், பலருக்கு உடல்நலத் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
மனிதர்களின் சுவார அமைப்பில் முக்கியமான உறுப்பாக உள்ளது நுரையீரல். நம்முடைய அனைத்து உடல் உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜனை வழங்குவதிலும், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் செயல்பாடுகள் குறையும் போது சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதோடு மட்டுமின்றி குளிர்காலத்தில் நுரையீரலின் செயல்பாடு குறையக்கூடும். காற்றின் தரம் எந்தளவிற்கு குறையும் போது ஆஸ்துமா, ஒவ்வாமை, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சில தீவிர நுரையீரல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கட்டாயம் சில அடிப்படை விஷயங்களையும், உணவு முறையில் சில மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: Winter Health Tips: குளிர்காலத்தில் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் 6 உணவுகள் இதோ
குளிர்காலங்களில் சுவாசம் தொடர்பான பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால், எப்போதும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் சிறு தானியங்களை உட்கொள்ள வேண்டும். ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உதவக்கூடும்.
மேலும் படிக்க: அடிக்கிற குளிரிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்புடன் வைத்திருக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டியது இவை தான்!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com