இளம் வயதிலிருந்து முதுமையை நோக்கி நகரும் போது மனிதர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து அதிகரிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் பலவீனமாகவும் எளிதில் உடையக்கூடியதாகவும் மாறும் ஒரு நோயாகும். இந்த நோய் வந்தால் எலும்பு முறிவு எளிதில் ஏற்படும்.
உங்களுக்கு குறைந்த எலும்பு அடர்த்தி அல்லது எலும்பு வலுவிழப்பு அதாவது ஆஸ்டியோபீனியா என்ற நிலை இருந்தால் கட்டாயம் மருத்துவர் அல்லது எலும்பு நிபுணரை அணுகி ஆலோசனை பெறுங்கள். எலும்பை வலுவாக்குவதற்கு பல உடற்பயிற்சிகள் உள்ளன. எனவே எலும்பு ஆரோக்கியத்திற்கு மேம்படுத்த உடற்பயிற்சி திட்டத்தைத் தொடங்குவது நல்லது.
விறுவிறுப்பான நடை
வேகமாக அல்லது விறுவிறுப்பாக நடப்பது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். குறிப்பிட்ட ஆய்வு ஒன்றில் வாரத்திற்கு நான்கு மணிநேரம் நடந்தால் இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 41 விழுக்காடு குறையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிக உடல்எடை காரணத்தால் விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்ள இயலாத பட்சத்தில்
நடக்கும் போது உங்கள் வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரியுங்கள். இதற்கு நீங்கள் காசு செலவு செய்யத் தேவையில்லை. எங்கேயும் எப்போதும் நீங்கள் விறுவிறுப்பாக நடக்கலாம்.
மலையேற்றம்
நீங்கள் மலையேறும் போது உங்கள் கால்கள் தரையில் பட்டுஏற்படும் தாக்கம் குறிப்பாக உங்கள் இடுப்பு எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும். மலையேற்றத்தில் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் நகர்வதால் கால் எலும்புகளில் இன்னும் அதிகமான தாக்கத்தைப் பெறுவீர்கள். கால்களில் ஏற்படும் அதிக தாக்கம் அதிக எலும்பு அடர்த்திக்கு வழிவகுக்கிறது.
மேலும் படிங்கLeg Pain Symptoms : மகளிர் கவனத்திற்கு! அடிக்கடி கால் வலி ஏற்படுகிறதா ?
ராக்கெட் ஸ்போர்ட்ஸ்
டென்னிஸ், ஸ்குவாஷ் மற்றும் துடுப்பு படகு போன்ற விளையாட்டுகள் உங்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும். உங்களை நோக்கி வரும் பந்தை அடிக்க ஒவ்வொரு முறையும் ராக்கெட்டை கொண்டு செல்லும் போது கை, மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுக்கிறீர்கள். அதேநேரம் இந்த விளையாட்டுளகளில் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டின் செயல்பாடு அதிகமாக இருக்கும்.
அதே நேரம் தாக்கத்துடன் கூடிய எடை தாங்கும் பயிற்சியானது உங்கள் கால் எழும்புகளுக்கு கூடுதல் சக்தியை சேர்க்கிறது. வயதானவர்களுக்கு பலவீன எழும்பு பிரச்சினை இருந்தால் அதன் சமநிலையை மேம்படுத்தவும், முழு வீழ்ச்சியைத் தடுக்கவும் இந்தப் பயிற்சிகள் மிகவும் முக்கியம். மேலும் டாய் சி, யோகா, பின்னோக்கி நடப்பது போன்ற பயிற்சிகளையும் மேற்கொண்டு எலும்புகளை வலுவாக்கலாம்.
மேலும் படிங்கStay Fit : குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி ?
பெரும்பாலான இளைஞர்களுக்கு எலும்பு ஆரோக்கியத்தில் எளிதில் குறைபாடு ஏற்படாது. ஆனால் இளமையில் இருந்து முதுமையை நோக்கி நகரும் போது உங்கள் சமநிலையை நீங்கள் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் எலும்புகள் வலு இழப்பதை உணர்ந்தால் அதற்கான தீர்வைக் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation