herzindagi
pineapple card image ()

Pineapple Side Effects: அதிகமாக சாப்பிடுவதால் உடலுக்கு எவ்வளவு பிரச்சனைகள் கொடுக்குமாம் அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் மிகவும் சுவையான பழம், ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது நன்மைகளுக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்
Editorial
Updated:- 2024-05-01, 19:42 IST

அன்னாசிப்பழம் மிகவும் சுவையான மற்றும் சத்தான பழம். இதன் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கோடைக்காலத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தை மக்கள் தினமும் சாப்பிடுவார்கள். சிலர் சாலட்டாகவும், சிலர் ஜூஸ் செய்தும் குடிப்பார்கள். ஆனால் பெரும்பாலுமான மக்கள் உப்பு, கார பொடி கலந்து அன்னாசிப்பழத்தில் தூவி சுவைப்பார்கள்.  இதை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. வைட்டமின் சி, மாங்கனீஸ், நார்ச்சத்து, இரும்பு போன்ற அனைத்து வகையான சத்துக்களும் இதில் உள்ளன. அதே போல் அன்னாசிப்பழத்தை அதிகமாக உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அன்னாசிப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க: வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அட்டகாசமான டீ

அன்னாசிப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

அன்னாசி ஒரு இனிப்பு மற்றும் புளிப்பு தன்மை கொண்ட பழம். இயற்கை சர்க்கரை இதில் அதிகமாக காணப்படுகிறது. இதில் குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளதால் அதை அதிகமாக உட்கொண்டால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகலாம்.  நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அன்னாசி பழம் சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளை இன்னும் அதிகரிக்கலாம்.

diabetes inside

அன்னாசிப்பழம் ஒரு அமில தன்மை கொண்ட பழமாகும். மேலும் இந்த அசிடிட்டி நோயாளிகள் எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும். இது வயிற்று எரிச்சல் உள்ளவர்களுக்கு இன்னும் பிரச்சனைகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு, அஜீரணம் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளதால் இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பெண்களுக்கு அதிகமாக இரத்தபோக்கு ஏற்படலாம். அன்னாசிப்பழம் இரத்தப்போக்குக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கலாம்.

periods inside

அன்னாசிப்பழம் ஒரு அமிலப் பழம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை அதிகமாக உட்கொள்வது ஈறுகள் மற்றும் பல்களை சேதப்படுத்தும். இது பல் சொத்தை பிரச்சனைகளை உண்டாக்கும். இது தவிர இதை உட்கொள்வதால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். தொண்டையில் அரிப்பு, உதடு வீக்கம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

மேலும் படிக்க: கோடைக்காலத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தின் ஜூஸ் விறுவிறுவென உடல் எடையை குறைக்கும்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com