herzindagi
waist and thigh fat

1 மாதத்தில் இடுப்பு மற்றும் தொடை கொழுப்பை குறைக்க ஈசியான வழிகள்

இடுப்பு மற்றும் தொடை பகுதியி இருக்கும் கொழுப்பால் சிரமப்பட்டு, உங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிய முடியாமல் போனால் இதோ சில வழிகள்
Editorial
Updated:- 2023-08-31, 23:44 IST

பெண்களுக்கு உடலின் சில பகுதிகளில் உடல் பருமனால் சிரமப்படுவார்கள். குறிப்பாக இடுப்பு மற்றும் தொடைகளில் தேங்கியிருக்கும் கொழுப்பால் வெட்கப்படுகிறார்கள். இடுப்பு கனமான இருப்பதால் பெண்கள் பலராலும் விருப்பமான ஆடைகளை அணிய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.  உங்கள் உடலின் இந்த பெரிதாக இருக்கும் எடை பகுதியால் பிடித்த உடை பொருந்தவில்லையா?. கவலை வேண்டாம் இப்போது உங்கள் இடுப்பில் உள்ள பிடிவாதமான கொழுப்பைக் குறைக்க வழிகள்.

உண்மையில் இடுப்புக்கு அருகில் சேமிக்கப்படும் கொழுப்பு பெரும்பாலும் இடுப்புகளை வெளிப்புறமாக பெரிதாக காட்டுகிறது. இதன் விளைவாக நீங்கள் பொருத்தமான ஆடைகளை அணியும்போதெல்லாம் தணியாக வெளிப்படும் போது கஷ்டமாக இருக்கும். இடுப்பு கொழுப்பைக் குறைப்பதற்கு முன் அதன் காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் அதைக் குறைக்க சில வைத்தியங்களை முயற்சிக்க வேண்டும். கோயல் மெடிக்கல் சென்டரின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் மீனு கோயல், உங்கள் இடுப்பில் பிடிவாதமான கொழுப்பு படிவதற்கு என்ன காரணம் மற்றும் அதை போக்க எளிதான தீர்வுகள் என்ன என்பதை கூறியுள்ளார்

 

இந்த பதிவும் உதவலாம்:  எடை குறைக்கும் டயட்டில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்

இடுப்பு கொழுப்பு அதிகரிக்க என்ன காரணம்

 healthy food image

  • உடல் செயல்பாடு இல்லாததால் இடுப்பு கொழுப்பு அதிகரிக்கிறது
  • நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்யாமல் இருப்பது உங்கள் உடலின் சில முக்கிய பாகங்களில் கொழுப்பு சேர்வதற்கு காரணமாக இருக்கலாம். உங்கள் இடுப்பு தான் கொழுப்பு முதலில் சேரும் முக்கிய இடமாகும்
  • ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து இருப்பதனால் உடலில் கொழுப்பு சேரும் உடற்பயிற்சி இல்லாத பட்சத்தில் கொழுப்பை ஆற்றலாக மாற்ற முடியாது இதனால் இடுப்பு பெரிதாகிறது.
  • இடுப்பில் கொழுப்பு அதிகரிப்பதற்கு காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு.
  • உடலில் சில ஹார்மோன்கள் சமநிலை இல்லாததால் உடல் பருமன் அதிகரிக்கத் தொடங்குகிறது மற்றும் இடுப்பில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. அவற்றில் ஒன்று தைராய்டு ஹார்மோன். அதன் முறையற்ற செயல்பாடு உடலின் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கிறது. இது உடல் குறைந்த ஆற்றலுடன் தோற்றமளிக்கிறது மற்றும் கொழுப்பு அதிகமாக குவிகிறது.
  • பெண்களின் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாகவும் இடுப்பு கொழுப்பு அதிகரிக்கிறது.
  • பல சமயங்களில் மாதவிடாய் காலத்தில் கூட உடலின் இடுப்புப் பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது மற்றும் எடையும் அதிகரிக்கிறது. உண்மையில், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இடுப்பு கொழுப்பை அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.

பிடிவாதமான இடுப்பு கொழுப்பைக் குறைக்க குந்து உடற்பயிற்சி

 image

  • இடுப்பு கொழுப்பைக் குறைக்க உணவில் சில விஷயங்களைச் சேர்ப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வதால் வாழ்க்கை முறையை மாற்றலாம். இந்த குந்து உடற்பயிற்சி ஒரு மாதத்திற்குள் தொப்பையை குறைக்க உதவும்.
  • குந்து பயிற்சிக்கு முதலில் நேராக நிற்க வேண்டிம். 
  • அதன்பின் தோள்பட்டை அகலத்தை விட அகலமாக கால்களை விரித்து நீட்டி நிற்க வேண்டும். 
  • பிறகு கைகளை முன்னோக்கி நீட்டி, உங்கள் தொடைகளை கீழ் இறக்கி நிற்க்க முயற்சி செய்யுங்கள் .
  • உங்கள் கால்விரல்களுக்குப் பதிலாக முழங்கால்களில் உடலை நிறுத்துங்கள்.
  • மூச்சை நன்றாக வெளிவிட்டு அதன் பின் நிதனமாக இயல்பு நிலைக்கு திரும்பவும்.
  • இதை 10-15 முறை செய்யவும், ஆரம்பத்தில் மெதுவாக செய்யவும்.
  • நாளடைவில் பயிற்சியில் வேகம் எடுக்கலாம் 
  • இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

இரவும் பகலும் உடற்பயிற்சி செய்து இடுப்பு கொழுப்பை குறைக்க கடுமையாக உழைத்தாலும், உணவு மற்றும் பானங்களை சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் கொழுப்பை குறைக்க முடியாது. எனவே உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவை எடுத்துக் கொள்வது நல்லது. மது அருந்தாமல், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: இந்த ஸ்பெஷல் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் தீரும்

தொப்பையை குறைக்க அதிக தண்ணீர் குடிக்கவும்

 

நீர் தேக்கம் எடை அதிகரிப்பையும் பாதிக்கிறது. நீங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியாவிட்டால் அது உங்கள் உடலின் சில பகுதிகளில் கொழுப்பு குவிவதற்கு வழிவகுக்கும். முக்கியமாக குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் இடுப்புப் பகுதிகளில் கொழுப்பு சேமித்து வைக்கும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.

நீங்களும் பிடிவாதமான இடுப்பு கொழுப்பை அகற்ற விரும்பினால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எளிய தீர்வுகளை முயற்சிக்கவும். இந்த நடவடிக்கைகள் மூலம் நீங்கள் ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைவான காலத்தில் இடுப்பு கொழுப்பை குறைக்கலாம்.

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit- Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com