
உடல் சீராக இயங்க தண்ணீர் தேவை. இது உடலில் திரவத்தை பராமரிக்கிறது மற்றும் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்த நபர் நோய்வாய்ப்பட்டு மரணமும் நேரிடலாம். மொத்தத்தில், உயிர்வாழ்வதற்கு தண்ணீர் அவசியம். மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அல்கலைன் தண்ணீரைக் குடிக்கத் தொடங்கியுள்ளனர். வெற்று நீரை விட இது அதிக நன்மைகளைத் தருவதாகவும் பல நோய்களைத் தவிர்க்கலாம் என்றும் மக்கள் நம்புகிறார்கள். டாக்டர் பிரபாத் ரஞ்சன் சின்ஹா, மூத்த ஆலோசகர், உள் மருத்துவம், ஆகாஷ் ஹெல்த்கேர் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி கூருகிறார்
அதன் நன்மைகள் பற்றி அறிவியல் ஆராய்ச்சி உள்ளதால் அல்கலைன் நீரைக் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. எனவே அல்கலைன் நீர் என்றால் என்ன, அதைப் பெறுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்?
இந்த பதிவும் உதவலாம்: தொப்பையை கறைத்து ஒல்லியான இடை தரும் அற்புத ஜூஸ்

அல்கலைன் நீர் என்றால் கார நீர் என்று பொருள். அல்கலைன் நீரில் உள்ள கார தன்மையை அதன் pH அளவைக் குறிக்கிறது. pH நிலை என்பது 0 முதல் 14 வரையிலான ஒரு எண்ணாகும். pH அளவு ஒரு பொருள் எவ்வளவு அமிலம் அல்லது எவ்வளவு காரமானது என்பதை அளவிடும். அதன் pH அளவு 1 ஆக இருக்கும் போது மிகவும் அமிலமாக இருக்கும், அதன் pH 13 இருந்தால் அது காரமானது. அதேபோல், அல்கலைன் நீரின் pH அளவு வழக்கமான தண்ணீரை விட அதிகமாக உள்ளது. பொதுவாக இயற்கை நீரின் pH 6 முதல் 7 வரை இருக்கும், அதே சமயம் அல்கலைன் நீரின் pH அளவு 8 ஆகும். இந்த காரணத்திற்காக, சிலர் அமில வீச்சிலிருந்து விடுபட உதவுவதாக நம்புகிறார்கள்.

இந்த பதிவும் உதவலாம்: வயிறு கோளாறு காரணமாக சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள்
நிபுணர்களின் கூற்றுப்படி இந்த தண்ணீரைப் பற்றி குறிப்பிட்ட அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை எனவே அதை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும். pH சமநிலை, நீரேற்றம், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நோய் தடுப்பு ஆகியவற்றின் கூற்றுகள் இருந்தபோதிலும், அதை மட்டுமே நம்புவது புத்திசாலித்தனம் அல்ல. பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சமச்சீரான உணவைப் பின்பற்றுவதோடு சுத்தமான தண்ணீரைத் தொடர்ந்து உட்கொள்வது நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கிய நன்மைகளுக்காக நீங்கள் அல்கலைன் தண்ணீரைக் குடிப்பவராக இருந்தால் நிச்சயமாக ஒரு நிபுணரை அணுகவும்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com