ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் அனைத்து உணவுகளுக்கும் ஆதார பொருளாக இருப்பது வெங்காயம் மட்டுமே. பல உணவுகளில் இதை வதக்கி தாளித்து பயன்படுத்துவார்கள், சில உணவுகளில் இதை பச்சையாகவே சாலட்டாக சாப்பிடுவார்கள். வெங்காயம் நாம் சமைக்கும் உணவின் சுவையை கூட்டுவது மட்டும் அல்லாமல் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது. இதில் குறைந்த அளவு கலோரிகள் தான் உள்ளன. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டங்கள் அதிக அளவில் இருக்கிறது. அதே நேரத்தில் இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகியவை அதிகம் நிறைந்து காணப்படுகின்றன.
வெங்காயத்தை அடிக்கடி உண்பது நம் உடலுக்குள் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறது. சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை நீக்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதை நாம் பல்வேறு விதமாக சமைத்து சாப்பிட்டாலும், பச்சையாக வெங்காயத்தை உண்பது மேலும் பல பலன்களை தரக்கூடியது என்று கூறப்படுகிறது. எனவே இன்று இந்த கட்டுரையில் மத்திய அரசின் மருத்துவமனையான ESICயின் உணவு நிபுணர் ரிது பூரி அவர்கள் வெங்காயத்தை உண்பதால் உடல் ரீதியான பிரச்சினைகளை எப்படி தடுக்கலாம் என்று கூறுகிறார்.
இதுவும் உதவலாம் :தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
உங்கள் கூந்தல் மெலிதாக இருந்தால் அல்லது உங்களுக்கு தலையில் பொடுகு உண்டாகி இருந்தால்,வெங்காயம் சாப்பிட பிரச்சனைகள் தீரும். வெங்காயத்தில் சல்பர் அளவு அதிகமாக இருக்கிறது. இதனால் கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். உங்களுக்கு கூந்தல் தொடர்பான பிரச்சனை ஏதும் இருந்தால், வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதை தலை முடியில் நேரடியாக தடவி ஊற விடவும். இதை 20-30 நிமிடங்கள் வரை அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு முடியை ஷாம்பு கொண்டு அலச வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இவ்வாறு செய்தால், கூந்தல் வெகு சில நாட்களுக்குள் அடர்த்தியாகவும், அழகாகவும் மாறி உங்கள் அழகை மெருகூட்டும்.
உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்தால், வெங்காயம் உட்கொள்வது உங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், சிகப்பு அல்லது வெள்ளை வெங்காயத்தை வட்ட வட்டமாக அரிந்து கொள்ள வேண்டும். இதை பாதத்தின் அடிப்பகுதியில் வைத்து அப்படியே ஒரு காலுறையை அணிந்து கொள்ளவும். தூங்கும் போது இரவு முழுவதும் இப்படியே தூங்க வேண்டும். இதன் பின்னர் நீங்கள் காலையில் எழுந்து பார்த்தால், உங்கள் உடல் உபாதைகள் அனைத்தும் பறந்து போய் விடும்.
அறுவை சிகிச்சையை செய்த பின்பு அதன் ஞாபகார்த்தமாக வடுக்கள் நம் உடலில் தங்கி விடுகிறது. ஆனால் இந்த வடுக்களை இயற்கையான முறையில் மறைக்க நினைப்பவர்கள், வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து ஒரு பஞ்சில் சாறை நனைத்து, வடுக்கள் உள்ள பகுதிகளில் அடிக்கடி தடவுங்கள். இதை தொடர்ந்து நீங்கள் செய்யும் போது, ஒரு சில நாட்களில் உங்களுக்கு வித்தியாசம் தெரிந்து விடும்.
கீல்வாதம் அல்லது மூட்டு வலி காரணமாக நீங்கள் எப்போதுமே அசௌகரியமாக உணர்ந்தால்,கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காய சாற்றைச் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்த வேண்டும்.
இதுவும் உதவலாம் :கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
ஒரு ஸ்பூன் வெங்காய சாற்றுடன் வெல்லம் கலந்து பருகினால் வறட்டு இருமல் நீங்கும்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com