herzindagi
uses of tomato juice

தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

ஆரோக்கியத்தை பராமரிக்க, சத்து நிறைந்த பானத்தை  குடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, வெறும் தக்காளி சாற்றினை குடித்தால் போதுமானது...
Editorial
Updated:- 2023-03-04, 19:34 IST

நீங்கள் உங்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், சத்துக்கள் நிறைந்த தக்காளி சாற்றைப் பயன்படுத்துங்கள். தக்காளி சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புரதங்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, எனவே இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே, இன்று இந்த கட்டுரையில், தக்காளி சாற்றின் சில நன்மைகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம்.

ஆரோக்கியம் நிறைந்த சத்து பானமாக செயல்படுகிறது

நீங்கள் சத்து பானங்களை உட்கொள்ளும் போது, அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். ஆனால் அத்தகைய சூழ்நிலையில், தக்காளி சாறு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க இது ஒரு நல்ல சத்து பானமாக இருக்கும். தக்காளி சாறு பருகுவது உடல் சோர்வைப் போக்கவும் உதவுகிறது.

இதுவும் உதவலாம் :காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

இதயத்திற்கு நலம் தரும் ஆற்றல் வாய்ந்தது

தக்காளிச் சாற்றில் வைட்டமின் B3, E மற்றும் லைகோபீன் உள்ளன. இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே சமயத்தில், பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, எனவே மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. எனவே இது உங்கள் இதயத்திற்கு மிகவும் நலம் தருவதாக இருக்கும்.

tomato juice benefits for health

எலும்புகளுக்கு பலம் தரும்

தக்காளி சாற்றில் வைட்டமின் K மற்றும் கால்சியம் சத்து உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். தக்காளி சாற்றில் உள்ள வைட்டமின் K, எலும்பில் உள்ள ஆஸ்டியோகால்சினைச் செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது ஒரு முக்கியமான கொலாஜன் இல்லாத புரதச்சத்து ஆகும். எனவே, நீங்கள் தக்காளி சாற்றை உட்கொள்ளும்போது, உங்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் ஓரளவுக்கு குறைகிறது.

புகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை மாற்றியமைக்கிறது

புகைபிடிப்பதால் உடல் பழுதடையும் என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த பழுதடைதலை தக்காளி சாறு குறைக்கிறது. தக்காளி சாற்றில் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் கூமரிக் அமிலம் உள்ளது, இது சிகரெட் புகைக்கும் போது நம் உடலால் தயாரிக்கப்படும் கார்சினோஜென் எனும் வேதி பொருளை எதிர்த்துப் போராடுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நேர்மறையான விளைவை தருகிறது

தக்காளி சாற்றில் போதுமான அளவு வைட்டமின் C இருப்பதால், இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு நேர்மறையான விளைவை பெறுகிறது. தக்காளி சாறு குடிப்பதால், சளி மற்றும் காய்ச்சல் ஏற்படாமல் இருக்கிறது.

இதை கவனத்தில் கொள்ளுங்கள்

  • தக்காளி சாறு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் நீங்கள் சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது அவசியம் ஆகிறது. உதாரணத்திற்கு நீங்கள் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனையுடன் போராடு கிறீர்கள் என்றால், நீங்கள் தக்காளி சாற்றை மிகக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
  • அதே சமயத்தில், தக்காளியால் ஏற்படும் ஒவ்வாமை உள்ளவர்கள் தக்காளி சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் கர்ப்பமாகவோ அல்லது தாய்ப்பால் கொடுப்பவராகவோ இருந்தால், தக்காளி சாறு சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
  • எனவே இப்போது நீங்களும் தக்காளிச் சாற்றை உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியத்தை காத்து கொள்ளுங்கள்.

what are the benefits of tomato juice

இதுவும் உதவலாம் :நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளை தரும் பச்சை பீன்ஸ்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com