herzindagi
aloevera juice health benefits

Aloe Vera Juice Benefits : கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கற்றாழை ஜூஸை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சுலபமாக செய்திடலாம். இதை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் பார்க்கலாம்…
Expert
Updated:- 2023-03-05, 08:00 IST

கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள குளிர்ச்சி தன்மையால் பல்வேறு பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சருமம் கல்லீரல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளும் இதில் அடங்கும்.

கற்றாழை நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை சேர்க்கிறது. இதை அறிந்த பலரும் கற்றாழை உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நீங்கள் விரும்பினால் கற்றாழையை ஜூஸ் வடிவிலும் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க ஆயுர்வேத குறிப்புகள்

கற்றாழை ஜூஸை பலரும் விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும் இதை நாமே வீட்டில் தயாரித்து குடித்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • கற்றாழை
  • தண்ணீர்
  • எலுமிச்சை சாறு
  • தேன்

செய்முறை

aloe vera gel

  • கற்றாழை இலையில் இரும்புறமும் உள்ள பகுதி மற்றும் மேல் தோலை கவனமாக வெட்டி எடுக்கவும்.
  • பின் ஒரு ஸ்பூனை பயன்படுத்தி கற்றாழை ஜெல்லை சுரண்டி எடுக்கவும்.
  • எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, அதை சுத்தமான நீரில் 1-2 முறை கழுவி எதுத்துக்கொள்ளவும்.
  • இப்போது ஒரு மிக்ஸியில் கற்றாழை ஜெல் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  • அரைத்த கற்றாழை ஜூஸை ஒரு கிளாஸில் மாற்றவும்.
  • இதனுடன் தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.
  • எலுமிச்சை சாறு கற்றாழை ஜூஸின் சுவையை அதிகரிக்கும். எனவே இதை தவிர்க்க வேண்டாம்.
  • நீங்கள் செய்யும் ஸ்மூத்தி அல்லது ஷேக்குகளிலும் இந்த கற்றாழை ஜூஸை சேர்த்து குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?


கற்றாழை ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள்

aloevera juice

தினமும் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். கற்றாழை ஜூஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அலர்ஜியை தடுக்கவும் உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கற்றாழை ஜூஸ் குடிப்பது இரத்தத்தை சுத்திகரிக்கவும், அல்சர் மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

  • கற்றாழை ஜூஸ் குடிப்பது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது குடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கலை தடுக்கிறது.
  • கற்றாழையில் சருமத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், அவற்றை உள்ளிருந்து பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது. கற்றாழை ஜூஸ் குடிப்பதால் முகப்பருக்களையும் தடுக்கலாம்.
  • கற்றாழையில் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், சோடியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. மேலும் இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் C உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. மேலும் அழற்சி மற்றும் இருதய நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

கற்றாழை இயற்கையானது என்றாலும், இது ஒரு சிலருக்கு பொருந்தாமல் போகலாம். நீங்கள் ஏதேனும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் இதனை எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com