Mushroom Benefits : காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

காளானின் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டால், நீங்களும் வாரத்திற்கு இரண்டு முறை கட்டாயம் சமைத்து சாப்பிடுவீர்கள்... 

 
Sanmathi Arun
mushroom benefits

நீங்கள் காளான் சாப்பிடுவீர்கள் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு வேளை இதுவரை காளான் சாப்பிடாதவராக இருந்தால், கவலை வேண்டாம். இந்த கட்டுரையை படித்த பிறகு நீங்களும் காளான் சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். ஏனென்றால் இந்த கட்டுரையில் காளான் சாப்பிடுவதால் ஏற்படும் சிறப்பான நன்மைகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். காளானில் நார்ச்சத்து, செலீனியம், வைட்டமின் C மற்றும் வைட்டமின் D சத்து அதிகம் உள்ளது. ஒருவர் அன்றாடம் காளான் சாப்பிடும் பட்சத்தில், மூளையின் செயல்பாடு மற்றவர்களை விட கூர்மையாகி விடும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை குறைப்பது மட்டும் தான் ஒவ்வொருவருக்கும் மிக பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க, பெரும்பாலான மக்கள் உடற்பயிற்சிகளை மட்டுமே செய்கின்றனர், ஆனால் யாரும் சரியான உணவு முறைகளில் கவனத்தை செலுத்துவதில்லை. ஒருவேளை உங்கள் உடல் எடை அதிகரிப்பதை நினைத்து நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்றால், இனி காளானை தினமும் நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்தானது உங்கள் எடையை அதிகரிக்க செய்யாது. மேலும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அது மட்டுமல்ல, இதில் உள்ள புரதம், உங்களை எந்த விதமான வியாதிகளும் அண்டாமல் பாதுகாக்கிறது.

வயிற்று பிரச்சனை தீரும்

காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் இருக்கின்றன. இந்த குணங்களால் உங்களுக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்படாது. மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகளை சரி செய்ய வேண்டும் என்றால் அடிக்கடி உணவில் காளானை சேருங்கள். சளி மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகளும் எளிதில் உங்களை அண்டாது.

எலும்புகளை பலமாக்கும்

காளானில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்புகளை பலமாக்க உடலுக்கு கால்சியம் சத்து தேவைப்படும் என்பதை அனைவரும் அறிந்ததே. உங்கள் உடலில் கால்சியம் சத்து குறைபாடு இருக்கிறது என்று நினைத்தால் காளானை சாப்பிடலாம். பெரும்பாலும் மக்கள் தங்கள் மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்க காளான் உண்பார்கள். காளானில் இருக்கும் வைட்டமின் D சத்து எலும்புகளுக்கு நல்லது

பசியை குறைக்கிறது

காளானை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள பசியும் அடிக்கடி எடுக்காது. காளானில் இருக்கும் கொலஸ்ட்ரால் பசியின்மையை நீக்குகிறது, உங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. வயிறும் எளிதில் நிரம்பி விடுகிறது. இதை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது மற்றும் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதிகப்படியான மக்கள் தங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த காளானை உட்கொள்கிறார்கள்.

mushrrom health medicinal benefits

கூடுதல் தகவல்கள்

  • காளான் நம் சருமத்திற்கு நன்மை தரும்
  • பெரும்பாலான பெண்கள் தங்கள் முடி வளர்ச்சிக்கு காளான் சமைத்து சாப்பிடுகிறார்கள்
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் காளான் சாப்பிடுவது, அவர்கள் உடல் நலத்திற்கு நல்லது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Disclaimer