
சிகரெட் பாக்கெட்டுகளில் வாய் புற்றுநோயின் படத்தைப் பார்த்திருப்பீர்கள். எந்த வடிவத்திலும் புகையிலையை உட்கொள்வது ஆபத்தானது இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது. சிகரெட் பிடிப்பவர் உடல்நிலை கேடு விலைவிக்கும் என்பது தெரியும். இவர்கள் மட்டுமின்றி அருகில் இருப்பவர்கள் சேர்ந்து கஷ்ட்டப்படுகின்றனர். புகைப்பிடிப்பவர் இதை அறிந்தும் மற்றவர்களுக்கு தீங்கு கொடுக்கிறார்கள்.
மேலும் படிக்க: 30 வயது மேல் இதய நோய் வராமல் தடுக்க இந்த உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்
அதுமட்டுமின்றி புகைபிடிப்பது பற்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. சிகரெட் பிடிப்பது பற்களில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை பல நேரங்களில் மக்கள் உணரவில்லை. Dentem Dental and Orthodontic Clinic இன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குணிதா சிங் கருத்துப்படி புகைபிடித்தல் முதலில் பற்களை பாதிக்கத் தொடங்குகிறது. இது வாய் புற்றுநோய்க்கு மட்டுமல்ல, ஈறு பிரச்சனைகள், பல் இழப்பு, பல் சிதைவு மற்றும் வாய்வழி அறுவை சிகிச்சைக்கு கூட வழிவகுக்கும்.

புகைப்பிடிப்பவர்களுக்கு 4-5 மடங்கு அதிகமான ஈறு பிரச்சனைகள் வரலாம். ஒருவர் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால் ஈறு பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிய முடியாது. எப்படியே கண்டுபிடித்தாலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால் அவர்களுக்கு சிகிச்சையை எளிதில் செய்ய முடியாது. ஈறுகளில் நெக்ரோசிஸ் பிரச்சனையும் இருக்கலாம். ஏதேனும் அறுவை சிகிச்சை தவறுதலாக செய்தால் புகைப்பிடிப்பவரின் வாயில் விரைவில் குணமாகாது.

புகையிலையை உட்கொண்டால் நோயெதிர்ப்பு அமைப்பு மெதுவாக வேலை செய்யத் தொடங்குகிறது. புகைப்பிடிப்பவரின் பல் அகற்றப்பட்டால் அவரது வாயில் உள்ள காயம் குணமடைய நீண்ட நேரம் எடுக்கும். மெதுவான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக இவை அனைத்தும் நிகழ்கின்றன.
சிகரெட் பிடிப்பது வாய் புற்றுநோய் மற்றும் அல்சர் ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும். சிகரெட்டுடன் மது அருந்துபவர்கள் இன்னும் அதிக ஆபத்து ஏற்படும். இதனால் நாக்கு, கன்னங்கள், அண்ணம், உதடுகள் போன்றவற்றில் புண்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் வாயின் சுவை மாறுகிறது. சுகாதாரமின்மை மற்றும் இனிப்புகள் சாப்பிடுவதால் மட்டும் துவாரங்கள் ஏற்படாது. புகைபிடிப்பதும் பல் சொத்தைக்கு ஒரு காரணம்.புகைபிடித்தல் முதலில் பற்கள் மஞ்சள் நிறத்தில் பாதிக்கிறது.
மேலும் படிக்க: 15 நாட்களில் உடல் கொழுப்பை குறைத்து ஸ்லிம்மாக மாற்றும் 3 உடற்பயிற்சிகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit- Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com