
நம்முடைய வாழ்நாளில் எப்பொழுதாவது மூளையில் ஏதாவது பாதிப்பு மற்றும் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துக்களால் தலையில் அடிபடுதல் போன்றவர்கள் ஏற்படும் பாதிப்புகள் மூளையின் செயல்திறனைக் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கிறது. இளம் வயதில் எவ்வித பாதிப்பையும் சந்திக்க நேரிடுகிறது. வயதாக வயதாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சின்ன சின்ன விஷயங்களைக் கூட மறந்துவிடுகிறார்கள். இது தான் மறதி நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.
மேலும் படிக்க: சோம்பலாக உள்ளதா? வெறும் 60 நாட்களில் வாழ்க்கையைப் புத்துணர்ச்சியாக்க இதை மட்டும் செய்யுங்க!
இதோடு மட்டுமின்றி மறதி நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்கள் ஒரே செயல்களை மீண்டும் மீண்டும் செய்ய ஆரம்பிப்பார்கள். குறிப்பாக அடிக்கடி தலை வாருதல், குளிப்பது, கைகளை மீண்டும் மீண்டும் கழுவிக் கொண்டே இருப்பது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவார்கள். அடிக்கடி தலைவலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? எப்படியெல்லாம் மறதி நோய் பாதிக்கப்பட்ட முதியவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மறதி நோயால் பாதிக்கப்படும் முதியவரக்ள் வீடுகளில் தனியாக இருந்தால் அவர்களைத் தனியாக விடக்கூடாது. மாறாக யாராவது எப்போதும் உடன் இருக்க வேண்டும். ஒருவேளை வேலை நிமிர்த்தமாக வெளியூர்களில் இருந்தால் வாரத்திற்கு ஒருமுறையாவது வீடியோ காலின் வாயிலாக பேசவும்.
மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க உதவும் சீரக தண்ணீர்; எப்படி தெரியுமா?
வயதானவர்கள் மறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை எப்போதும் குழந்தைகள் போன்று பராமரிக்க வேண்டும். ஏதாவது வேண்டும் என்று அடம்பிடித்தாலும், கோபம் கொள்ளாதீர்கள். அவர்களை எப்போதும் ஒரு குழந்தையாக பாவிப்பது நல்லது. நீங்கள் வேலைப்பளுவின் காரணமாக வெளியூர் சென்றால், யாரையாவது உடன் விட்டு செல்லவும். தனிமையில் இருப்பது மேலும் அவர்களின் வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தும் .
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com