herzindagi
foods that help lower blood pressure

Lower Blood Pressure : உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

இரத்த அழுத்தம் குறைய உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம். என்ன சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2024-02-28, 20:03 IST

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி 100 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சினை இருக்கிறது. உணவுமுறை, வாழ்க்கை முறை மாற்றத்தால் பலருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. சராசரியாக ஒரு நபருக்கு 140/90 mmHg இருக்க வேண்டும். இதற்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் பிரச்சினை தீவிரமாக மாறிவிடும்.

இரத்த அழுத்தத்தை மருந்து மாத்திரைகள் இன்றி எப்படி எளிதான உணவுமுறை, வாழ்க்கை முறை மூலம் குறைக்கலாம் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உணவு முறையால் இரத்த அழுத்ததை பெருமளவு குறைக்க முடியுமா ? முடியாதா ? அல்லது எந்தளவிற்கு குறைக்க முடியும் என்பதற்கான வழிகளை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

நீங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்காவிட்டால் மூளை, இதயம், சிறுநீரகம் பாதிப்பு வரும். இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன. மருந்துகள் பயன்படுத்தி குறைப்பது, மற்றொன்று மருந்துகள் இல்லாமல் குறைப்பது. இதில் வாழ்வியல் மாற்றங்களும் அவசியம்.

உணவில் உப்பு உபயோகத்தை குறைப்பது, யோகா & உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் குறைப்பது அதிகபட்சமாக 20 புள்ளிகள் வரை இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதைவிட குறைந்த மாவுசத்து உணவுகளை உட்கொள்வது பலன்களை தரும்.

மாவுச்சத்து உணவுகளை குறைப்பதால் அது உடல் எடை இழப்புக்கு வழி வகுப்பதால் இரத்த அழுத்தம் குறைகிறது என நினைக்க வேண்டாம். குறைந்த மாவுச்சத்து உணவுகள் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். 

மேலும் படிங்க “அனோஸ்மியா” வாசனை உணர்வு திறன் இழப்புக்கான மருத்துவ சிகிச்சை

அதாவது குறைந்த மாவுச்சத்து உணவுகளை உட்கொள்ளும் போது இன்சுலின் குறைவு, இரத்த குழாய் சுருக்கம், உடலில் உப்பு அளவு குறைவு, உடலில் நீர்த்தேக்க நிலை குறைந்து இறுதியாக இரத்த அழுத்தம் குறைகிறது. இதற்கு மிதமான அளவு உணவுச்சத்து முறைக்கு மாற வேண்டும்.

  • ஒரு நாளில் இரண்டு வேளை மிதமான மாவு உணவுச்சத்து உணவுகள் உட்கொள்வதை குறைத்து விடவும்.
  • காலையில் இட்லி, தோசை, பொங்கல், வடை என சாப்பிடாமல் 50 கிராம் தேங்காய், 50 கிராம் ஊறவைத்த பாதாம், 50 கிராம் நிலக்கடலை, மூன்று முட்டை சாப்பிடவும்.

cashewnuts for blood pressure

  • மதிய வேளையில் ஒரு கப் சாதம், இரண்டு காய்கறி பொரியல், ஒரு முட்டை சாப்பிடவும்.
  • மாலை வேளையில் ஒரு முட்டை, நட்ஸ், பயறு வகைகள் அல்லது பழங்கள் மற்றும் ஒரு முழு வெள்ளரி, கொய்யா சாப்பிடவும்.

eggs

  • இரவு நேரத்தில் இரண்டு சப்பாத்தி, ஒரு முட்டை, சுண்டல் குழம்பு சாப்பிடவும். நீங்கள் அசைவம் சாப்பிடும் நபராக இருந்தால் இரண்டு சாப்பாத்தியுடன் 150 சிக்கன் குழம்பு சாப்பிடலாம்.
  • அதாவது நாம் மாவுச்சத்து உணவுகளை குறைத்து புரத உணவுகளை அதிகரிக்கிறோம்.

foods for lower blood pressure

  • சர்க்கரையை எந்த விதத்திலும் உணவில் பயன்படுத்தக்கூடாது. இது இரத்த அழுத்தத்திற்கு மிகப்பெரிய எதிரி.
  • தின்பண்டங்கள் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்திவிடுங்கள். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை நிறுத்திவிடுங்கள்.
  • தினமும் ஒருமணி நேரம் நடைபயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் 25 முதல் 27 புள்ளிகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

மேலும் படிங்க இரவில் தாமதமாக சாப்பிடவே கூடாது !

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com