முட்டைக்கோஸ் போல தோற்றமளிக்கும் ப்ரக்கோலி உண்மையில் பல ஆரோக்கியம் தரும் நற்பண்புகள் நிறைந்தது. தட்டில் வைக்கப்பட்டிருக்கும் ப்ரக்கோலியைப் பார்த்து நம்மில் பெரும்பாலோர் முகத்தை சுளிக்கிறோம், ஆனால் உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய அனைத்து காய்கறிகளையும் விட இது மிகவும் ஆரோக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ப்ரக்கோலியில் உங்கள் உடலுக்குத் தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
- உடல் எடையை கட்டுப்படுத்துகிறது
- இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
- புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது
- எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- சரும அழகை அதிகரிக்கிறது
- மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- முடியை பலப்படுத்துகிறது
உடல் எடையை கட்டுப்படுத்துகிறது
ப்ரக்கோலியில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது, உடல் எடையை குறைக்க உதவும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் உள்ளதால் இது உடல் எடை குறைப்புக்கான சிறந்த காய்கறியாக அமைகிறது. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை உண்டாக்குகிறது மற்றும் சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாமல் இருக்கிறது. விளைவு அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை தடுக்கிறது. ப்ரக்கோலியில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் C உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க உதவுகிறது. மேம்படுத்தப்பட்ட வளர்சிதை மாற்றம் உடல் அதிக கலோரிகளை அழிக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
ப்ரக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாக இருக்கிறது. சில ஆய்வுகள் அடிப்படையில், ப்ரக்கோலியை சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது. ஏனெனில் இது உடலின் கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது
ப்ரக்கோலியில் சல்போராபேன் இருப்பதால் புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. இந்த ஆர்கானிக் சல்பர், புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில், புரோஸ்டேட், நுரையீரல், மார்பக புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் முக்கியப் பொருட்களில் ஒன்றாக ப்ரக்கோலி இருக்கிறது. இந்த பச்சை காய்கறியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கால்சியம் மற்றும் வைட்டமின் K நிறைந்துள்ள ப்ரக்கோலி உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ப்ரக்கோலியை தொடர்ந்து சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. இதில் ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, இது வயதான காலத்தில் கூட உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
சரும அழகை அதிகரிக்கும்
நீங்கள் இயற்கையாகவே அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற விரும்பினால், உங்கள் உணவில் ப்ரக்கோலியை சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ரக்கோலியில் குளுக்கோராபானின் உள்ளது, இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. ப்ரக்கோலியில் வைட்டமின் C உள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் வயதான செயல்முறையை மெதுவாக ஆக்குகிறது.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ப்ரக்கோலியில் வைட்டமின் K நிறைந்துள்ளது, இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ப்ரக்கோலி சாப்பிடுவது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. அல்சைமர் மற்றும் மனச்சோர்வு போன்ற மூளை ஆரோக்கிய பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. மூளை தொடர்பான ஏதேனும் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் இது ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.
இதுவும் உதவலாம் :கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயுர்வேத குறிப்புகள்
முடியை பலப்படுத்துகிறது
வைட்டமின்கள் B மற்றும் C நிறைந்துள்ள ப்ரக்கோலி முடியை வேர்களில் இருந்து பலப்படுத்துகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி முடியை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. ப்ரக்கோலியில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது முடிக்கு இயற்கையான பளபளப்பை வழங்க உதவுகிறது.
ப்ரக்கோலி உங்கள் தினசரி உணவில் ஏதாவது ஒரு விதத்தில் சமைத்து சேர்க்கப்பட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், அதை உட்கொள்ளும் முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation