பப்பாளி இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் ஆகியவற்றின் சிறந்த பண்புகள் உள்ளன. இதில் ஏராளமான அளவில் வைட்டமின்-A, B, C, E, வைட்டமின்-K மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் கூறுகள் உள்ளன. பப்பாளி இலைகளில் பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. பப்பாளி இலைகளின் சில பயனுள்ள ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி புது தில்லியின் மிக பிரபலம் வாய்ந்த டாக்டர் அகன்க்ஷா அகர்வால் (BHMS) அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
டெங்கு காய்ச்சளுக்கு சிகிச்சை
பப்பாளி இலைச்சாறு டெங்கு காய்ச்சலுக்கான சிறந்த மருத்துவ நிவாரணிகளில் ஒன்றாகும். இந்த இலைகள் டெங்கு காய்ச்சலைக் குறைக்க முக்கிய மருந்தாகச் செயல்படுகின்றன. டெங்கு காய்ச்சல் இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை குறைக்கிறது மற்றும் பப்பாளி இலை சாறு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. பப்பாளி இலைச் சாறு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. டெங்கு காய்ச்சலின் போது, ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு சிறிய கப் பப்பாளி சாறு எடுத்து கொள்வது, இரத்த பிளேட்லெட் எண்ணிக்கைய அதிகரித்து, காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.
இதுவும் உதவலாம் :கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயுர்வேத குறிப்புகள்
புற்றுநோயை தடுக்கிறது
பப்பாளி இலைகளில் லைகோபீன் உள்ளது, இது புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. புற்றுநோய்-செல் வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது. ஆய்வுகளின் அடிப்படையில், பப்பாளி இலை சாறு பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி இலைச் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை புற்றுநோய்-செல் செயல்பாட்டை மாற்றி அமைக்கின்றன. இந்த இலைகள் புற்றுநோயை குணமாக்கும் மருந்தாகச் செயல்படும் என்று முழுமையாகச் சொல்ல முடியாவிட்டாலும், புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என்பது உண்மை.
செரிமானத்தை மேம்படுத்தும்
பப்பாளி இலைகளில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. பப்பாளியில் உள்ள பாப்பைன் என்ற நொதி, புரதங்களை நன்கு உடைக்கிறது. இவ்வாறு உடைப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டை எளிதாக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் பப்பாளி இலை சாறு மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பல செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலுமாக குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பப்பாளி இலைகளில் பினாலிக் கலவைகளான, பப்பெய்ன் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அவை பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆதாரமாக உள்ளன, அவை உடலை வலிமையாக்குகின்றன. பப்பாளியில் உள்ள வைட்டமின்-C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் உடலை பல வகையான தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. காயங்களை ஆற்றுதல், உடல் திசுக்களின் வளர்ச்சி, சேதமடைந்த செல் மீண்டும் உருவாக்குதல் போன்ற செயல்களையும் செய்கிறது. பப்பாளி இலைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், அவை உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது
பப்பாளி இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இது அவர்களின் இனிப்பு ஆசையை குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது. பப்பாளி இலை விழுது அல்லது அதன் சாறை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் அதில் நார்ச்சத்து இருப்பதால் கொழுப்பின் அளவையும் குறைக்கிறது என்று சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது
பப்பாளி இலைகளை அரைத்து எடுக்கப்படும் சாற்றில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. இதனால் இதை உட்கொள்ளும் போது வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் நிறைவாக வைத்திருக்கும். இதில் உள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்கிறது. உடல் எடையை வேகமாக குறைக்க விரும்புபவர்கள் பப்பாளி பழம் மற்றும் அதன் இலைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுவும் உதவலாம் :துளசி இலைகளின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை
மாதவிடாய் வலியினை குறைக்கிறது
பப்பாளி இலைகள் மற்றும் விதைகள் கருப்பைச் சுருக்கங்களைக் குறைக்கிறது. இதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன. பப்பாளியில் உள்ள பப்பெய்ன் எனும் ஒரு நொதி கருப்பையில் இருந்து இரத்தத்தை சீராக வெளியேற்ற உதவுகிறது. நீர்க்கட்டிகளான கருப்பை நோயின் (பிசிஓடி) அறிகுறிகளைக் குறைப்பதற்கும் இது சிறப்பாகச் செயல்படுகிறது.
சருமத்துக்கு நன்மை பயக்கக்கூடியது
பப்பாளி இலைகளில் பல்வேறு சத்துக்கள் இருப்பதால், அவை சருமத்தில் அருமையாக செயல்பட்டு சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த இலைகள் சருமத்தை ஈரப்பதமாகவே வைத்திருக்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன மற்றும் சருமத்தில் இந்த இலையை பயன்படுத்தப்படும் போது தோல் வறண்டு போய் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். பப்பாளி இலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் வயதாகும் போது உண்டாகும் செயல்முறைகளை கொஞ்சம் மெதுவாக செயல்பட வைக்க உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
பப்பாளி இலை விழுது மற்றும் சாறு ஆகியவற்றை முடிக்கு மேற்பூச்சாக பயன்படுத்தலாம். இதனால் முடி வளர்ச்சி மேம்படும் மற்றும் முடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் அதிக அளவு ஆக்ஸிஜன் அழுத்தம் தான் முடி உதிர்தலுக்கு காரணமாகிறது என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆக்ஸிஜன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஆக்ஸிஜன் அழுத்தத்தைக் குறைக்கவும், பின்னர் முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும். பப்பாளி இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் வைட்டமின் E போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் கொண்ட பல கலவைகள் உள்ளன.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation