சுட்டெரிக்கும் சூரியன் மற்றும் அதிகரிக்கும் வெப்பநிலையால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இது குமட்டல், வாந்தி, சோர்வு, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல், நீர் இழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் அதிகப்படியான வெப்பத்தால் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் இந்நிலையை ஹீட் ஸ்ட்ரோக் என்று அழைக்கிறார்கள்.
ஆயுர்வேதத்தின் படி கோடைகால பிரச்சனைகளை தவிர்க்க உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கான சில முக்கிய குறிப்புகளை ஆயுர்வேத நிபுணரான நிதி ஷேத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு கோடையை சமாளிக்க இந்த மூன்று உதவி குறிப்புகளும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
இந்த பதிவும் உதவலாம்: வைட்டமின் D குறைபாட்டை போக்கும் அற்புத பானங்கள்
காலையில் எழுந்தவுடன் வெறும் காலுடன் புல் மீது நடக்கவும். காலை நேர குளிர்ந்த பனி உங்கள் உடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்ற உதவுகிறது. இந்த இயற்கை சூழல் உடல் மற்றும் மனதுக்கு குளிர்ச்சி மற்றும் அமைதியை தரும்.
1 டீஸ்பூன் தனியாவை லேசாக இடித்து ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் எழுந்தவுடன் இந்த நீரை வடிகட்டிய பின் குடிக்கலாம்.
கோடை காலத்தில் வெள்ளை, வெளிர் நிறங்கள், பருத்தி மற்றும் கைத்தறி ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். இவற்றின் இயற்கையான சுவாசிக்கக்கூடிய தன்மை உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், காற்று சுழற்சிக்கும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: மூங்கில் அரிசி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com