கொத்தமல்லி இலைகள் பொதுவாக அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்படும் சமையால் பொருட்களில் ஒன்றாகும். பல காலமாக, இந்த மூலிகை இலைகளைச் சுவையை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் கொத்தமல்லி இலைகளைப் பயன்படுத்தி சட்னி தயாரிக்கிறார்கள், மற்றவர்கள் நறுமணம் மற்றும் ஊட்டச்சத்துக்காக அவற்றை நேரடியாக உணவில் சேர்க்கிறார்கள்.
மேலும் படிக்க: இரவில் தன்னை மறந்து ஆழ்ந்த தூக்கத்தைப் பெற மஞ்சள் கலந்த பாலை இப்படிக் குடியுங்கள்
இருப்பினும் கொத்தமல்லி இலைகளின் அமைப்பை உணவுகளிலும், டிப்ஸாகவும் விரும்பாத சிலர் இருக்கிறார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருந்து, உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பும் நபர்களாக இருந்தால் கொத்தமல்லி இலை தேநீர் போல் செய்து அருந்தலாம். இப்படி தயாரித்துக் குடிப்பது எளிது, மேலும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். தினமும் கொத்தமல்லி இலை தேநீர் அருந்துவதன் செய்முறை மற்றும் பல்வேறு நன்மைகளை அறியத் தொடர்ந்து படியுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து, நட்சத்திர சோம்பு மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கொதிக்க விட்ட பிறகு கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
ஒரு மூடியால் மூடி 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.
சில நிமிடங்கள் கழித்து எரிவாயுவை அணைத்து ஒரு கோப்பையில் ஊற்றவும்.
நீங்கள் விரும்பினால் இயற்கை இனிப்பு தேன் போன்றவை சேர்த்துக் குடிக்க வேண்டும்.
எலும்புகள் ஆரோக்கியத்திற்குக் கொத்தமல்லி தேநீர் முக்கியமானவை. இல்லையென்றால், மூட்டு மற்றும் முழங்கால் வலியால் அவதிப்படுவீர்கள். இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க கால்சியம் நிறைந்த கொத்தமல்லி இலை தேநீரைக் குடிக்கவும். இந்த ஊட்டச்சத்து எலும்புகளைப் பாதுகாக்கவும், அவை வளரவும் உதவும் என்று அறியப்படுகிறது.
கொத்தமல்லி இலை தேநீர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கால்சியம் இருப்பதால் இரத்த நாள பதற்றத்தைத் தளர்த்துவதாக அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் மூலமும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு இருதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைப்பதன் மூலமும் மேலும் உதவுகிறது.
கொத்தமல்லி இலை தேநீர் உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமானது மட்டுமல்லாமல், சருமத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. இந்த தேநீர் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது, இது சருமத்தை நச்சுகள் மற்றும் பிற அசுத்தங்களிலிருந்து விடுபட அனுமதிக்கிறது. உங்கள் சருமம் உள்ளே இருந்து சுத்தமாக இருந்தால், வெளியிலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நம்மில் பெரும்பாலோர் ஒரு உட்கார்ந்த வாழ்க்கை முறையை வாழ்கிறோம், அதனால் வயிறு குப்பை உணவுகள் மற்றும் எண்ணெய் உணவுகளால் நிரப்புகிறோம். இதை தினமும் செய்வது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். அதனால்தான் உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உணவில் ஆரோக்கியமான தேநீரைச் சேர்க்கவும். செரிமான சாறுகள் சுரக்க அனுமதிக்கும் கொத்தமல்லி இலை தேநீரை முயலவும். இது உங்கள் செரிமான அமைப்பை ஆதரிக்கும் மற்றும் வலுவாக வைத்திருக்கும்.
மேலும் படிக்க: மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிறு வலிக்கு மாத்திரை எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்குமா?
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com