சமையலில் கொத்தமல்லி இலைகள் ஒரு பிரிக்க முடியாத அங்கம் ஆகும். இதனை பாதுகாப்பது ஒரு பெரிய சவால். ஏனெனில், வாங்கிய ஓரிரு நாட்களிலேயே காய்ந்து, நிறம் மாறிவிடும். ஃபிரிட்ஜ் அல்லது போதுமான இடம் இல்லாத வீடுகளில், இவை சீக்கிரம் கெட்டுப் போய் விடும். அதன்படி, ஃப்ரிட்ஜ் இல்லாமல் இதனை எப்படி ஒரு வாரம் வரை பாதுகாப்பது என்று பார்க்கலாம்.
மேலும் படிக்க: ஸ்டார் ஹோட்டல் போன்று வீடு முழுவதும் மனம் வீச வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
கொத்தமல்லியில் அதிக ஈரப்பதம் இருப்பதால், அது விரைவில் கெட்டுப்போகும். வெப்பம் மற்றும் காற்று இந்த செயல்முறையை விரைவுபடுத்துகிறது. இதனால் கொத்தமல்லி இலைகள் சில நாட்களிலேயே மஞ்சள் அல்லது கருப்பு நிறமாக மாறும். காற்று நுழையாத பாலிதீன் பைகளில் சேமிப்பது ஈரப்பதத்தை வெளியேறவிடாமல், மேலும் வேகமாக அழுகிப் போகச் செய்யும். எனவே, சரியான சேமிப்பு முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்.
காட்டன் துணியில் சேமிக்கும் முறை: கொத்தமல்லியை தண்ணீரில் கழுவி நன்கு உலர்த்தவும். பின், அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் சுற்றி, ஒரு கூடை அல்லது மூடிய டப்பாவில் வைக்கவும். காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், கொத்தமல்லி ஒரு வாரம் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
மண்பானை முறை: கிராமங்களில் இன்றும் மண்பானைகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. கொத்தமல்லியை லேசாக ஈரப்படுத்தி, ஒரு மண்பானையில் சேமித்து வைக்கவும். பானையின் இயல்பான குளுமை, கொத்தமல்லியை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க உதவுகிறது.
எலுமிச்சை தோல் முறை: கழுவிய கொத்தமல்லியை ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து, அதனுடன் எலுமிச்சை தோலையும் சேர்க்கவும். எலுமிச்சை தோல் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்து, கொத்தமல்லியை சரியாக பராமரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க: இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... உங்க வீட்டு ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்!
வேருடன் வைக்கும் முறை: கொத்தமல்லியை பெரும்பாலும் வேர்களுடன் வாங்குவதுண்டு. வேர்ப்பகுதியை லேசாக ஈரமான மண்ணால் மூடி, அதன் மேல் ஒரு துணியை போட்டு மூடி வைக்கலாம். இந்த முறை ஃபிரிட்ஜ் இல்லாமல் ஒரு வாரம் வரை இலைகளை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவுகிறது.
காகிதத்தில் சேமிக்கும் முறை: ஃபிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள், காய்ந்த கொத்தமல்லியை காகிதத்தில் சுற்றி, ஒரு உலர்ந்த பெட்டியில் வைக்கலாம். காகிதம் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, இலைகளை நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும்.
இது போன்ற எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஃப்ரிட்ஜ் இல்லாவிட்டாலும் கொத்தமல்லியை எளிதாக ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com