சுமார் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பாக உலகளவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பது பொதுவான பிரச்சினையாக இருந்தது. இன்றும் கூட சில நாடுகளில் பசி, பட்டினி ஆகிய காரணங்களால் குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இன்றி வளர்கின்றன. ஆனால் தற்போது வீட்டில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது தான் தெரிகிறது அவர்களின் உணவுப் பழக்கம் மாறி முற்றிலும் இரட்டிப்பு ஊட்டச்சத்துடன் காணப்படுகின்றனர். அதாவது பெரும்பாலான குழந்தைகள் தற்போது உடல் பருமனாக காணப்படுகின்றனர்.
குழந்தைகள் நோஞ்சானாக இருந்த காலங்கள் மாறி பீட்சா, பர்கர் சாப்பிட்டு குண்டாக இருக்கின்றனர். குழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கிறதே என்று கவலைப்பட்ட பெற்றொர் இப்போது குழந்தைகளின் உடல்பருமனை கண்டு பயப்படுகின்றனர். இதில் அச்சப்படுதுவதிலும் நியாயம் இருக்கிறது. குழந்தைகள் உடல் பருமனாக இருப்பதற்கு என்ன காரணம், இதை எப்படி சரி செய்வது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
குழந்தை உடல்எடை அதிகமாக இருந்தாலே தைராய்டு பிரச்சினை, ஹார்மோன் கோளாறு என்ற கோணத்தில் பெற்றோர் யோசிக்கின்றனர். சாப்பாடு, உணவுமுறை மற்றும் உடல் செயல்பாடு தான் குழந்தையின் உடல் பருமன் பிரச்சினைக்கு அடிப்படை காரணம். ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கூட ஹார்மோன் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் உடல் எடை அதிகரிப்பது கிடையாது.
பெரும்பாலான குழந்தைகளுக்கு உணவுமுறை, வாழ்க்கைமுறையினாலேயே உடல் பருமன் பிரச்சினை வருகிறது. இதில் மாற்றங்களை செய்தால் மட்டுமே உடல்பருமனுக்கு தீர்வு காண முடியும். உடல்பருமன் பிரச்சினைக்கான காரணம் சிறுவயதில் இருந்தே ஆரம்பிக்கிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லாமல் இதர பால் கொடுப்பது உடல் பருமனுக்கான காரணங்களாக அமைகின்றன. தாய்ப்பால் கொடுப்பதோடு இதர பால்களும் சேர்த்து குழந்தையின் எடையை அதிகரிக்க நினைப்பதால் உடல் பருமன் பிரச்சினை ஆரம்பமாகிறது.
மேலும் படிங்கஅதீத சிந்தனையை தவிர்த்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்
ஒரு 25 ஆண்டுகளுக்கு முன்னே யோசித்து பாருங்கள். நீங்கள் வீட்டில் குழந்தையாக இருந்த போது கடலை மிட்டாய், தேன் மிட்டாய் உட்பட சில தின்பண்டங்களை கொடுத்திருப்பார்கள். ஆனால் தற்போது நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதிலேயே சிப்ஸ், பிஸ்க்ட் மற்றும் குப்பை உணவு எனும் ஜங்க் புட்-ஐ அதிகளவு கொடுக்கிறீர்கள்.
மருத்துவ ஆராய்ச்சிகளின்படி குழந்தைகளுக்கு உணவளிக்கிறோம் என்ற பெயரில் தினமும் 80 முதல் 100 கிராம் அளவிற்கு மறைமுக சர்க்கரை கொடுக்கிறோம். இது குழந்தைகளின் உடல் பருமனுக்கு முக்கிய காரணம். எனவே குழந்தைகள் மறைமுக சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். பெரும்பாலும் வெளி உணவுகளை கொடுக்க கூடாது. பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் பொருட்களை கொடுக்காதீர். தின்பண்டங்கள் கொடுப்பதை முழுவதுமாக நிறுத்துங்கள்.
பள்ளிக்கூடங்களில் காலை 11 மணிக்கு ஸ்நாக் டைம், 1 மணிக்கு உணவு இடைவேளை, மீண்டும் 3 மணிக்கு ஸ்நாக் டைம் என வகுத்துள்ளனர். ஒரு முறை சாப்பிட்ட பிறகு நான்கு மணி நேரம் இடைவெளி அளிக்க வேண்டிய இடத்தில் மீண்டும் மீண்டும் குழந்தைகளுக்கு உணவளித்து கொண்டே இருக்கிறோம்.
குழந்தைக்கு பசித்தால் பழங்கள், சுண்டல், பயிறு வகைகளை வேகவைத்து கொடுக்கலாம். மாவுச்சத்து உணவுகளின் அளவுகளை குறைக்கவும். தற்போது உள்ள குழந்தைகள் 30 வயது நபர்களை போல நான்கு இட்லி, மூன்று தோசை, ஏழு பூரி சாப்பிடுகின்றனர். இதில் மாற்றம் தேவை.
மேலும் படிங்கசிறுநீரக கல் பிரச்சினையை தீர்ப்பதற்கான இயற்கை வழிகள்
காலையில் இட்லியின் எண்ணிக்கையை குறைத்து சுண்டல் கொடுக்கவும். மதிய வேளையில் அதிக சாதம் கொடுப்பதை தவிர்த்து ஒரு கப் சாதம், இரண்டு கப் காய்கறி கொடுக்கவும். புரத உணவுகளை அதிகப்படுத்தவும்.
இரவில் இட்லி, தோசை கொடுப்பதற்கு பதிலாக மூன்று முட்டை, 150 கிராம் சிக்கன் கொடுக்கலாம். இதை தொடர்ந்து செய்தாலே குழந்தைகளின் உடல்பருமன் பிரச்சினையை குறைக்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation